உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஏ.ஆர்.ரஹ்மான் நேரலை நிகழ்ச்சியின் பாரம்பரிய பூஜை விழா நடைபெற்றது!

ஏ.ஆர்.ரஹ்மான் நேரலை நிகழ்ச்சியின் பாரம்பரிய பூஜை விழா நடைபெற்றது!


தெலுங்கில் ராம்சரண் தற்போது நடித்துள்ள படம் 'பெத்தி'. புச்சி பாபு சனா என்பவர் இயக்கியுள்ள இந்த படம் ஜூன் நான்காம் தேதி திரைக்கு வருகிறது. கிராமப்புற விளையாட்டு கதையில் உருவாகியுள்ள இந்த பெத்தி படத்தின் டிரைலர் பல மொழிகளில் வெளியாகி 24 மணிநேரத்தில் மொத்தம் 101 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

மும்பையில் நடைபெற்ற இப்படத்தின் டிரைலர் வெளியிட்டு விழாவை தொடர்ந்து தற்போது மத்திய பிரதேசத்தின் போபாலில் உள்ள பெல் தசரா மைதானத்தில் ஏ.ஆர். ரஹ்மானின் பிரம்மாண்ட நேரலை நிகழ்ச்சி நடக்கிறது. மே 23ம் தேதி அன்று நடைபெற உள்ள இந்த இசை நிகழ்ச்சியின் பாரம்பரிய பூஜை விழா இன்று நடைபெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !