உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சூர்யா படங்களின் வசூலில் முதலிடம் பிடித்த 'கருப்பு'

சூர்யா படங்களின் வசூலில் முதலிடம் பிடித்த 'கருப்பு'


தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் இளம் ரசிகைகளால் அதிகம் ரசிக்கப்பட்ட நடிகர்களில் சூர்யாவும் ஒருவர். ஆரம்ப காலங்களில் காதல் படங்களில் நடித்து ரசிகைகளைக் கவர்ந்தார். அதன்பின் ஆக்ஷன் பக்கமும் பயணிக்க ஆரம்பித்தார்.

சூர்யாவின் கடைசி வெற்றிப் படமாக 2013ல் வெளிவந்த 'சிங்கம் 2' படம்தான் அமைந்தது. அதன்பின் அவர் நடித்து வெளிவந்த படங்கள் எதுவும் வியாபார ரீதியாக லாபத்தைத் தரவில்லை. ஓடிடி தளங்களில் வெளியான 'ஜெய் பீம், சூரரைப் போற்று' ஆகிய படங்கள் நல்ல விமர்சனத்தைத் தந்தன. துரதிர்ஷ்டவசமாக அந்தப் படங்கள் தியேட்டர்களில் வெளியாகவில்லை.

'சிங்கம் 2' படம்தான் சூர்யா நடித்த படங்களில் 120 கோடி வசூலைப் பெற்று இதுவரையில் முதலிடத்தில் இருந்தது. அதை தற்போது 'கருப்பு' படம் முறியடித்துள்ளது. முதல் மூன்று நாட்களிலேயே இப்படம் 147 கோடி வசூலைப் பெற்றது. நேற்றைய வசூலுடன் தற்போது 160 கோடியைக் கடந்துள்ளது.

இன்றும் படத்திற்கு நல்ல முன்பதிவு உள்ளது என்கிறார்கள். இந்த வார இறுதிக்குள் இப்படம் 200 கோடி வசூலைக் கடக்கும் என பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி நடந்தால் சூர்யாவின் முதல் 200 கோடி படமாக 'கருப்பு' படம் அமையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !