உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 4 மாத சிசுவை இழந்த நானா மற்றவர்களின் குடும்பத்தை கெடுப்பேன் : பாடகி கெனிஷா கண்ணீர்

4 மாத சிசுவை இழந்த நானா மற்றவர்களின் குடும்பத்தை கெடுப்பேன் : பாடகி கெனிஷா கண்ணீர்

நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தி உடனான பிரிவு காரணமாக நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்துள்ளார். ரவி மோகன் தனது தோழியான பாடகி கெனிஷா உடன் அடிக்கடி பொது இடங்களுக்கு வருவதால் இணையதளத்தில் நெட்டிசன்கள் அவர்களை கடுமையாக முறையில் விமர்சனம் செய்து வருகிறார்கள். தன்னை விமர்சிப்பவர்களுக்கு தன்னைப் பற்றிய சில வெளிச்சத்திற்கு வராத உண்மைகளை கண்ணீருடன் வெளியிட்டு பதிலடி கொடுத்திருக்கிறார் கெனிஷா.

அந்த வீடியோவில் அவர் கூறுகையில், ‛‛என்னுடைய 2013ம் ஆண்டில் என் அம்மாவை இழந்தேன். 2017ல் தந்தையை இழந்தேன். நான்காம் வகுப்பு படித்து வந்த போதே எனது உறவுக்காரர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன். என்னுடைய 19 வயதிலேயே திருமணம் நடைபெற்றது. நான் கர்ப்பமாக இருந்தபோது என்னுடைய கணவர் என் வயிற்றில் உதைத்ததால் நான்கு மாத சிசு இறந்து விட்டது. அந்த வலியில் இருந்து என்னால் இப்போது வரை வெளியில் வர முடியவில்லை. இப்படி என் வாழ்க்கையில் பெற்றோர் மட்டுமின்றி என் குழந்தையையும் நான் இழந்து விட்டேன். அதன் பிறகு திருமண வாழ்க்கையில் இந்த வெளியேறினேன்.

பார்களில் பாடுவதற்கு ஒரு இரவுக்கு 500 ரூபாய் வாங்கி இருக்கிறேன். என் வாழ்க்கையை நடத்துவதற்கு இப்படி எல்லாம் கஷ்டப்பட்டு உள்ளேன். இதுபோன்று என் வாழ்க்கையில் பல துயரங்களைக் கடந்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஆனால் என்னை பற்றி சோசியல் மீடியாவில் பலரும் கண்டபடி பேசுகிறார்கள்.

நான் ஒரு குடும்பத்தை கெடுத்து விட்டதாக சொல்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட அறிவே இல்லை. நானும், ரவி மோகனும் எங்கும் வெளிநாட்டுக்கு ஓடிப் போகவில்லை. உங்கள் கண் முன்னால் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் ரவி மோகன் என்னிடம் வந்தபோது ஒரு தெரபிஸ்டாக அவருக்கு அட்வைஸ் கொடுத்தேன். அதன்பிறகு தான் ஒரு நல்ல நட்பு ஏற்பட்டது.

ரவி மோகன் குடும்பத்தை கெடுக்க வேண்டும் என்று ஒரு சிசுவை வயிற்றிலேயே இழந்த நான் நினைப்பேனா? யார் குடும்பத்தையும் நான் கெடுக்க மாட்டேன். அதனால் என்னை பற்றி தவறான விமர்சனங்களை வெளியிடுவதை விட்டுவிட்டு உங்கள் வாழ்க்கையில் கவனம் செலுத்துங்கள் என்று அந்த வீடியோவில் கண்ணீர் மல்க பேசியுள்ளார் பாடகி கெனிஷா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !