உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / முதல்வர் விஜயை சந்தித்த நடிகர் சங்க நிர்வாகிகள்

முதல்வர் விஜயை சந்தித்த நடிகர் சங்க நிர்வாகிகள்

சினிமா துறையிலிருந்து வந்து இன்று தமிழகத்தின் முதல்வராகி உள்ளார் நடிகர் விஜய். அவர் பொறுப்பேற்றது முதல் பல துறையை சேர்ந்த பிரமுகர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சினிமா துறையை சேர்ந்த நிர்வாகிகளும் சந்தித்துள்ளனர்.

தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளான தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர்கள் பூச்சி முருகன் மற்றும் கருணாஸ் ஆகியோர் சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று(மே 15) விஜயை சந்தித்து வாழ்த்தினர். அப்போது திரைத்துறை மற்றும் நடிகர் சங்க கட்டடம் தொடர்பான சில கோரிக்கைகளை முன் வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

kumar
2026-05-15 18:20:20

Vijay mind voice to Karunas - Dai Koovathur mama, unna apram vachikkiren