உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தேவர் மகன் வீட்டில் படமாக்கப்பட்ட மலையாளப் படம் 'தேவர்'

தேவர் மகன் வீட்டில் படமாக்கப்பட்ட மலையாளப் படம் 'தேவர்'


தற்போது மலையாளத்தில் உருவாகும் பல படங்கள் அதிகப்படியான தமிழ் வசனங்கள் மற்றும் தமிழ் நட்சத்திரங்களைக் கொண்டு உருவாகி வருகின்றன. அந்த வகையில் மலையாளத்தில் உருவாகியுள்ள படம் 'தேவர்'. கேரள - தமிழ்நாடு எல்லைப் பகுதியில் வசிக்கும் மூன்று இளைஞர்களின் வாழ்க்கையில், ஒரு அதிக சக்தி கொண்ட சிலை வந்த பிறகு அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் சுவாரஸ்யமான மாற்றங்களை நகைச்சுவையாகச் சொல்லும் ஒரு பேண்டஸி ஹியூமர் த்ரில்லராக இந்தப் படம் உருவாகியுள்ளது.

நிஜிஷ் சகாதேவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் தியான் சீனிவாசன் தவிர கதாநாயகர்களாக நடித்துள்ள மற்ற மூவரும் புதியவர்கள் என்றாலும், இதில் தலைவாசல் விஜய், மொட்டை ராஜேந்திரன், வையாபுரி, ஐஸ்வர்யா எனத் தமிழ் நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு பொள்ளாச்சி மற்றும் கோயம்புத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்றுள்ளது. குறிப்பாகப் பொள்ளாச்சியில் 'தேவர் மகன்' படப்பிடிப்பு நடைபெற்ற அதே பாரம்பரிய வீட்டில், இந்த 'தேவர்' படத்தின் பல முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட்டு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !