ஜனநாயகன் : புது டைட்டில் கார்டு வேலைகள் ஆரம்பம்…
ADDED : 3 hours ago
தமிழக முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டுள்ள நடிகர் விஜய்யின் கடைசி படம் 'ஜனநாயகன்'. இப்படம் ஜனவரி 9ம் தேதி வெளியாக வேண்டியது. ஆனால், தணிக்கை பிரச்னை காரணமாக வெளியாகவில்லை. இப்படம் இன்னும் இரண்டு வாரங்களில் வெளியாகும் என அதன் தயாரிப்பாளர் கேவிஎன் வெங்கட் சமீபத்தில் அறிவித்திருந்தார். மே மாதக் கடைசியில் அல்லது ஜுன் மாதம் முதல் வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் 'ஜனநாயகன்' படத்தின் டைட்டில் கார்டை புது டிசைனில் மாற்றும் வேலைகள் நடந்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அது மட்டுமல்ல படத்தின் நாயகன் விஜய் டைட்டில் கார்டிலும் தமிழக முதல்வர் என்று மாற்றம் செய்ய உள்ளார்கள் என்றும் தெரிகிறது.
விஜய் ரசிகர்களின் ஆசைக்கேற்ப இது நடப்பதாகச் சொல்கிறார்கள். விரைவில் புது டிசைனில் படத்தின் புதிய போஸ்டர் வெளியாக உள்ளது.