'பெத்தி' டிரைலர் வெளியீட்டு விழா மும்பைக்கு மாற்றம்
தெலுங்கில் ராம்சரண் நடிப்பில் புச்சிபாபு சனா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'பெத்தி'. ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்க, சிவராஜ் குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஏற்கனவே இரண்டு முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு மாற்றப்பட்ட நிலையில், வரும் ஜூன் நான்காம் தேதி இப்படம் வெளியாவதாக இறுதி அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
இந்த நிலையில் தற்போது இதன் டிரைலர் வெளியீட்டு விழாவை போபால் அல்லது இந்தூர் ஆகிய நகரங்களில் நடத்துவதற்கு படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் தற்போது அந்தத் திட்டம் மாற்றப்பட்டு வரும் மே 18ம் தேதி மும்பையில் இந்த விழாவைப் பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்துள்ளனர்.
போக்குவரத்து வசதிகள் மற்றும் ஹிந்தி மொழியில் படத்திற்கான விளம்பரங்களை அதிகப்படுத்தும் நோக்கில்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த டிரைலர் வெளியீட்டைத் தொடர்ந்து மீண்டும் இன்னொரு முக்கிய நகரத்தில் நடைபெற இருக்கும் புரமோஷன் நிகழ்ச்சியில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 'பெத்தி' பாடல்களை லைவ் கான்சர்ட் செய்வார் என்றும் சொல்லப்படுகிறது.