உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நிமிஷா சஜயன் படத்திற்கு விருது

நிமிஷா சஜயன் படத்திற்கு விருது

கலாமயா பிலிம்ஸ் சார்பில் வி.கிதேஷ் தயாரிக்கும் படம் 'என்ன விலை'. சஜீவ் பழூர் இயக்குகிறார். நிமிஷா சஜயன், கருணாஸ், ஒய்.ஜி. மகேந்திரன், பூர்ணிமா பாக்யராஜ், மோகன் ராம், லொள்ளு சபா சுவாமிநாதன், கவிதாலயா கிருஷ்ணா, தீபா சங்கர், மொட்டை ராஜேந்திரன், நக்கலைட்ஸ் கவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதில் நிமிஷா, கருணாஸ் குடும்பத்திற்கு சட்ட ரீதியான வெற்றியை பெற்றுத் தரும் வழக்கறிஞராக நடித்துள்ளனர்.

ராமேஸ்வரம், சென்னை, புதுச்சேரி, கொச்சி உள்ளிட்ட 56 இடங்களில் பல கட்டங்களாக படமாக்கப்பட்டுள்ளது. தற்போது தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதை இந்த படம் பெற்றுள்ளது.

இது குறித்து இயக்குனர் சஜீவ் பழூர் கூறுகையில், “ஆழமான யதார்த்தமான களத்தில் இருந்து உருவான கதைதான் 'என்ன விலை'. இந்த திரைக்கதைக்கு கிடைத்த அங்கீகாரம் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. விருதிற்காக என இல்லாமல், இந்த படத்தை தீவிரமான மற்றும் ஆழமான அனுபவத்தை பார்வையாளர்களுக்கு தரும் விதமாகவும் உருவாக்கியுள்ளோம். இதனை பெரிய திரையில் படம் பார்க்கும்போது நிச்சயம் பார்வையாளர்களும் உணர்வார்கள்”என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !