நான் அம்மா செல்லம், அப்பா உடன் இணைந்து நடிக்க ரெடி : துல்கர் சல்மான்
தெலுங்கில் துல்கர் சல்மான் நடித்துள்ள படம் ‛ஆகாசம்லோ ஒக தாரா'. பவன் சதினேனி இயக்கி உள்ளார். துல்கர் சல்மானுக்கு ஜோடியாக சாத்விகா வீரவல்லி கதாநாயகியாக அறிமுகமாகிறார். ஸ்ருதி ஹாசனும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படம் தமிழில் ‛ஆகாயத்தில் ஒரு தாரகை' என்ற பெயரில் நவ., 20ல் ரிலீஸாகிறது.
படம் குறித்து துல்கர்சல்மான் பேசுகையில், ‛‛லக்கி பாஸ்கர் படம் நடிக்கும் முன்பே இந்த கதையை கேட்டேன். மற்ற படங்களில் கமிட் ஆனதால் இதில் நடிக்க முடியவில்லை. நான் இந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டு விடுவேனே என நினைத்தேன். பின்னர் நடிக்க வாய்ப்பு வந்தது. அப்பா மம்முட்டி நடித்த ஓம் படமும் என்னுடைய ஏஓடி(ஆகாயத்தில் ஒரு தாரகை) படமும் ஒரே நாளில் வருவது ஆசீர்வாதம்.
நான் அப்பாவுடன் இணைந்து நடிக்க ரெடி அவர்தான் தயங்குகிறார். நான் அம்மா செல்லம். என் படங்களை அவர் முதலில் பார்க்கிறார். அதனால் அப்பா நான் இத்தனை ஆண்டுகள் நடிக்கிறேன் என் படத்தை விட உனக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறார் என சொல்கிறார். இதில் ஹீரோயினாக சாத்விகா நடித்துள்ளார். அவர் அமெரிக்காவில் வளர்ந்தவர். அவர் பேச்சு, செயல்பாடு, சிரிப்பு எல்லாமே வித்தியாசமாக இருக்கிறது. அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்கிறேன். அம்மா, அக்கா, மனைவி, மகள் என பெண்கள் சூழ் உலகில் வளர்ந்தவன். இந்த படம் பெண்கள் ந்ம்பிக்கை, தன்னம்பிக்கை, வெற்றியை பேசுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என எந்த மொழியானாலும் நானே டப்பிங் பேசுகிறேன். அதை தான் ரசிகர்கள் விரும்புகிறார்கள் அடுத்து அட்லி உதவியாளர் இயக்கும் கோலி படத்தில் நடிக்க உள்ளேன்'' என்றார்.