ஆன்மிக பேச்சாளர் மகா விஷ்ணுவை மணந்தார் நடிகை மிருணாளினி ரவி
தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ‛சூப்பர் டீலக்ஸ் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மிருணாளினி ரவி. தொடர்ந்து ‛எனிமி, எம்.ஜி.ஆர் மகன், கோப்ரா, ரோமியோ' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தவிர தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ளார்.
ஆன்மிக பேச்சாளர் மகா விஷ்ணுவை இவர் காதலித்து வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்நிலையில் இவரை நேற்று (நவ.,15) திருமணம் செய்துள்ளார் மிருணாளினி.அதனை இன்று அறிவித்துள்ளார். தனியார் ரெசார்ட் ஒன்றில் இவர்களது திருமணம் விமரிசையாக நடந்தது. இந்த திருமணத்தில் இருவீட்டாரது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.
மகா விஷ்ணு ஆரம்பத்தில் தனியார் டிவி நிகழ்ச்சியில் காமெடி ஷோவில் பங்கேற்று வந்தார். தற்போது ஆன்மிகப் பேச்சாளராக உருவெடுத்துள்ள இவர், பல நிகழ்ச்சிகளில் ஆன்மிக சொற்பொழிவு ஆற்றி வருகிறார்.