உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜுன் மாதத்தில் தான் 'ஜனநாயகன்' ரிலீஸ்?

ஜுன் மாதத்தில் தான் 'ஜனநாயகன்' ரிலீஸ்?


வினோத் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள கடைசி படமான 'ஜனநாயகன்' படம் தணிக்கை சான்றிதழ் காரணமாக வெளியீடு தள்ளிப் போனது. தேர்தல் முடிந்து மே 4ம் தேதி முடிவுகள் வர உள்ளது. அதனால், அடுத்த வாரத்தில் படத்தின் தணிக்கை சான்றிதழ் கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் படத்தை மே 7 அல்லது 14 வெளியிடலாமா என்றும் பேச்சு வார்த்தை நடந்ததாம். ஆனால், இவ்வளவு அவசரத்தில் படத்தை வெளியிட வேண்டாம். தேர்தல் முடிவுகள் வந்து புதிய அரசு பதவியேற்ற பின்பு சிறிது இடைவெளியில் விட்டால்தான் அரசியல் ரீதியான பாதிப்பு எதுவும் படத்திற்கு வராது என தயாரிப்பு நிறுவனம் நினைக்கிறதாம்.

மேலும், 'ஜனநாயகன்' தயாரிப்பு நிறுவனத்தின் கன்னடப் படமான 'டாக்சிக்' படத்தை ஜுன் 4ம் தேதி வெளியிட இருந்தார்கள்.. நேற்று அப்படத்தின் வெளியீட்டைத் தள்ளி வைப்பதாக அறிவித்துள்ளார்கள். எனவே, அந்தத் தேதியில் 'ஜனநாயகன்' படத்தை வெளியிடலாமா என்றும் ஆலோசனை நடந்து வருகிறதாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

dravida model 2.0
2026-04-30 21:17:37

which year