2025ல் 'மத கஜ ராஜா', 2026ல் 'துருவ நட்சத்திரம்
தமிழ் சினிமாவில் தயாராகி பல வருடங்கள் ஆகியும் வெளிவராமல் முடங்கிக் கிடக்கும் பல படங்கள் இருக்கின்றன. அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. பைனான்ஸ் பிரச்னையில் சிக்கித்தான் பல படங்கள் வெளியாகாமல் இருக்கின்றன.
2025ம் வருடம் விஷால், வரலட்சுமி, அஞ்சலி மற்றும் பலர் நடித்த 'மத கஜ ராஜா' படம் வெளியானது. அந்தப் படம் 2013ம் ஆண்டே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், 12 வருடங்களுக்குப் பிறகே அந்தப் படம் வெளியானது.
அதே போல தயாராகி நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது 'துருவ நட்சத்திரம்' படம் வெளியாக உள்ளது. 2017ம் ஆண்டே இப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், பைனான்ஸ் சிக்கலில் சிக்கித் தவித்து வந்தது. கடைசியாக 2024ல் இப்படம் வெளியாகும் என அறிவித்தார்கள். இருப்பினும் அப்போதும் வெளியாகவில்லை.
நீதிமன்ற வழக்கின் காரணமாக தள்ளிப் போய் வந்த இப்படத்தின் வெளியீடு நீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக தற்போது வெளியாக உள்ளது. சுமார் 8 வருடங்களுக்குப் பிறகு இப்படம் வெளி வர உள்ளது.
'மத கஜ ராஜா' படம் 12 வருட இடைவெளிக்குப் பின் வந்தாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. அது போல 'துருவ நட்சத்திரம்' படமும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.