வாசகர்கள் கருத்துகள் (1)
ஆண்டவரின் பினாமி ?
‛மேயாதமான்' பட புகழ் ரத்னகுமார் இயக்கத்தில் விது, ப்ரீத்தி அஸ்ராணி, மாஸ்டர் மகேந்திரன் நடிக்கும் படம் 29. மே 8ம் தேதி படம் ரிலீஸாகிறது. சென்னையில் நடந்த இந்த பட நிகழ்ச்சியில் படத்தின் தயாரிப்பாளர்களான இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக ஆர்.ஜே.பாலாஜி கலந்து கொண்டார்.
ஆர்ஜே பாலாஜி கலகல
நிகழ்ச்சியில் ஆர்.ஜே.பாலாஜி பேசுகையில் 'கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய பீட்சா பாடல் வெளியீட்டு விழாவை நான் தொகுத்து வழங்கினேன். அப்போதிலிருந்து நல்ல நட்பு. அவர் அப்படியே இருக்கிறார். இந்த பட விளம்பரத்தில் கூட நான் இயக்கிய கருப்பு பற்றி பேசினார். அதற்கு நன்றி. என் படத்தில் லோகேஷ் நடித்தார், என் பட விளம்பர நிகழ்ச்சிக்கு வந்தார். அவருக்கு நன்றி. ஒட்டு மொத்த தமிழக மக்கள் சார்பில் லோகேஷ் கனகராஜிடம் சின்ன வேண்டுகோள். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நீங்க நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இனியாவது முடிவெட்டி, ஷே விங் பண்ணுங்க. உங்க முகம் களையாக இருக்கணும்.இந்த படத்தில் நடித்த மாஸ்டர் மகேந்திரன் எங்களை அண்ணா என்கிறார். அவர் எங்களை விட பெரிய சீனியர்'' என கலகலப்பாக பேசினார்.
கார்த்திக் சுப்பராஜ் பேசுகையில், ''ஆரம்ப காலத்தில் இருந்து இந்த பட இயக்குனர் ரத்னகுமாரை தெரியும். நாங்கள் நிறைய பேசியிருக்கிறோம். அந்த காலத்தில் ரத்னா, லோகேஷ் கனகராஜ், நான் என எல்லாரும் எங்கள் குறும்படங்கள், எதிர்காலம் பற்றி பேசியிருக்கிறேன். இந்த படத்தை நானும், லோகேசும் இணைந்து பண்ணுவது சந்தோஷம். கிரியேட்டிவ் வேலைகளை நான் பண்ணுகிறேன். மீதியை என் மச்சான் கார்த்திகேயன் கவனித்துக் கொண்டார். அவர் பார்த்த வேலை பெரியது. 'என்றார்
லோகேஷ் கனகராஜ் பேசுகையில், ''நேற்று(நேற்று முன்தினம்) மதியம் கால் பண்ணினேன். எனக்காக இந்த விழாவுக்கு வந்ததற்கு நன்றி. என் புரடக் ஷன்ல இது முதல் படம். இதற்கு முன்பு பைட் கிளப், மைக்கேல் படங்களை என் நண்பர்களுக்காக பிரசன்ட் செய்தேன். இந்த படம் உருவாக ரத்னகுமார் தான் காரணம். அவர் என் ரைட்டர், என் நண்பர், என் போட்டியாளர். என் பட முயற்சிக்காக சுற்றிக்கொண்டு இருந்த காலத்தில் இருந்தே அவரை தெரியும். நாங்கள் தெருத் தெருவாக சுற்றியிருக்கிறோம். அப்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய பீட்சா வெளியாகி வெற்றி பெற்றது. அந்த படத்தின் வெற்றியால் எங்களை போன்ற பலரின் கனவுகள் நிறைவேறியது.
ரத்னகுமாரின் மது, என்னுடைய அவியல் என்ற குறும்படமும் கார்த்திக் சுப்பராஜ் கம்பெனியில் தான் வந்தது. இப்போது நண்பர்களாக இருக்கிறோம். நான் கார்த்திக் சுப்பராஜூடன் இணைந்து படம் பண்ணும் அளவுக்கு வளர்ந்துவிட்டேன். மக்களுக்கு நன்றி. நாம வளரும்போது கூட இருப்பவங்களை கூட்டிகிட்டு போயிடணும்னு நினைக்கிறேன். இதற்கெல்லாம் இன்ஸ்பரேசன் கமல் சார் தான். சினிமாவில் சம்பாதித்தை, சினிமாவிலயே முதலீடு செய்யணும்னு அவர்தான் கற்றுக் கொடுத்தார். இந்த படம் மட்டுமல்ல, என் கம்பெனியில் பல படங்கள் வருகிறது. அதில் நண்பர்கள், புதுமுகங்கள் இணைகிறார்கள். என் படம் மாதிரியே, என் கம்பெனி படத்துக்கும் ஆதரவு தரணும். இந்த படத்தின் கதையை நான் கேட்கவில்லை. நான் அவனை குருட்டுதனமாக நம்பினால், அவன் இன்னமும் சிறப்பாக வேலை செய்வான். நானும் தியேட்டரில் இந்த படத்தை பார்க்க ஆவலாக இருக்கிறேன். உங்க விமர்சனங்களுக்கு வெயிட்டிங், நல்லா இருந்தால் நாலு பேரை பார்க்க சொல்லுங்க' ' என்றார்.
ஆண்டவரின் பினாமி ?