உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வினோத் கதையில் மீண்டும் நடிக்கும் நட்டி நட்ராஜ்

வினோத் கதையில் மீண்டும் நடிக்கும் நட்டி நட்ராஜ்

ஒளிப்பதிவாளரான நட்ராஜ் சுப்பிரமணியம் என்கிற நட்டி, நாளை படத்தின் மூலம் நடிகராகவும் மாறினார். தொடர்ந்து தற்போது பல படங்களில் கதையின் நாயகனாகவும் வில்லனாகவும் நடித்து வருகிறார். இவரை வைத்து சதுரங்க வேட்டை என்கிற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து வெற்றிப்பட இயக்குனராக அறிமுகமானார் எச் வினோத். அதன்பிறகு அஜித், விஜய், கார்த்தி ஆகியோரை வைத்து படங்களை இயக்கும் அளவிற்கு முன்னணி இயக்குனராக உயர்ந்து விட்டார் வினோத்.

இந்த நிலையில் சதுரங்க வேட்டை படத்திற்கு பிறகு மீண்டும் வினோத்துடன் கூட்டணி சேர்ந்துள்ளார் நட்டி. ஆனால் இந்த முறை இப்படத்திற்கான கதையை மட்டுமே வினோத் எழுதி இருக்கிறார். அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஒருவர் தான் இந்த படத்தை இயக்குகிறார். இதற்கான ஆரம்பகட்ட வேலை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !