உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சம்யுக்தாவின் ‛பிளாக் கோல்ட்' படப்பிடிப்பு முடிவடைந்தது

சம்யுக்தாவின் ‛பிளாக் கோல்ட்' படப்பிடிப்பு முடிவடைந்தது

தனுசுடன் வாத்தி படத்தில் நடித்த சம்யுக்தா தற்போது விஜய் சேதுபதியுடன் ஸ்லம்டாக் 33 டெம்பிள் ரோடு மற்றும் லாரன்ஸ் உடன் பென்ஸ் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். முதன் முறையாக பிளாக் கோல்ட் என்ற படத்தில் அவர் கதையின் நாயகியாக காவல்துறை அதிகாரி வேடத்தில் நடித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு 60 நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது. இந்த தகவலை வெளியிட்டுள்ள சம்யுக்தா, ‛‛கண்டிப்பாக இந்த பிளாக் கோல்ட் படம் எனது சினிமா கேரியரில் ஒரு மைல் கல் படமாக இருக்கும். இப்படத்தில் சண்டை காட்சிகளில் பலமுறை விபத்துக்களில் சிக்கி ரத்தம் சிந்தி நடித்தேன். விரைவில் இப்படம் எப்போது திரைக்கு வரும் என்பது குறித்து படக்குழு அறிவிப்பார்கள்'' என்று தெரிவித்துள்ளார்.

யோகேஷ் கேஎம்சி என்பவர் இயக்கி உள்ள இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். சம்யுக்தாவுடன் முரளி சார்மா, ராவ் ரமேஷ், நாசர் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !