ஏதென்ஸில் குடும்பத்தினர் உடன் ரஜினி சென்ற சுற்றுலா போட்டோ வைரல்
ADDED : 1 hours ago
கிரீஸில் நடைபெற்ற இசையமைப்பாளர் அனிருத் - காவ்யா திருமணக் கொண்டாட்டங்களை தொடர்ந்து அங்கு தனது குடும்பத்துடன் பல முக்கிய பகுதிகளை சுற்றிப்பார்த்துள்ளார் ரஜினி. அந்த போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் அவரது மகள் சவுந்தர்யா ரஜினி.
அவர் வெளியிட்ட பதிவில், ‛‛ஏதென்ஸில் நாங்கள் எவ்வளவு அற்புதமான நினைவுகளை உருவாக்கியுள்ளோம். இந்த அழகான குடும்பச் சுற்றுலாவின் ஒவ்வொரு தருணத்தையும் ரசித்து வருகிறோம்'' என்று பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன. நடிகை ராஷி கண்ணா உள்ளிட்ட பலரும் இந்தப் பதிவிற்கு ‛அழகாக இருக்கிறது' என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
ஏதென்ஸின் அழகைக் குடும்பத்தினர் சுற்றிப் பார்க்கும் வேளையில், சாதாரண உடையில் ரிலாக்ஸாக உள்ளார் ரஜினி.