உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விமல் நடிப்பில் சிம்புதேவன் இயக்கும் 'நவோரியா'

விமல் நடிப்பில் சிம்புதேவன் இயக்கும் 'நவோரியா'


வடிவேலு நடிப்பில் 'இம்சை அரசன் 23ம் புலிகேசி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் சிம்புதேவன். அடுத்து, 'அறை எண் 305ல் கடவுள், இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம், ஒரு கன்னியும் மூணு களவாணிகளும், புலி, கசட தபற, விக்டிம், போட்' படங்களை இயக்கியுள்ளார். ஒவ்வொரு படங்களும் நகைச்சுவையுடன் கூடிய நல்ல கதையம்சங்களை கொண்டிருந்ததால், இவருக்கென தனி ரசிகர் வட்டம் இருக்கிறது.

இந்த நிலையில், தற்போது நடிகர் விமலை வைத்து சிம்புதேவன் புதிய படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்திற்கு 'நவோரியா' என டைட்டில் வைத்துள்ளனர். அன்ஷீத்தல் என்பவர் நாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன், ஆரி அர்ஜூனன், தம்பி ராமையா, வடிவுக்கரசி, பால சரவணன், அப்புக்குட்டி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படமும் ஒருவித பேண்டஸி கதையில் உருவாகியுள்ளது பர்ஸ்ட்லுக் போஸ்டரை பார்க்கையில் தெரிகிறது. டிசம்பரில் படம் வெளியாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !