உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிரித்விராஜின் கலிபா ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரித்விராஜின் கலிபா ரிலீஸ் தேதி அறிவிப்பு

மலையாளத்தில் பிரித்விராஜ் நடிப்பில் நவம்பர் மாதம் வெளியான விலாயத் புத்தா திரைப்படம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரசிகர்களிடம் வரவேற்பை தவறியது. தற்போது பிரித்விராஜ் கலிபா, ஐ நோபடி மற்றும் சந்தோஷ் டிராபி உள்ளிட்ட மலையாள படங்களிலும் தெலுங்கில் வாரணாசி படத்திலும் நடித்து வருகிறார். இதில் கலிபா திரைப்படத்தை புலி முருகன் பட இயக்குனர் வைசாக் இயக்கி வருகிறார்.

ஏற்கனவே பிரித்விராஜை வைத்து தனது முதல் படமான போக்கிரி ராஜா படத்தை வைசாக் இயக்கியிருந்தார். கிட்டத்தட்ட 15 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் பிரித்விராஜ் உடன் இந்த படத்தில் கூட்டணி சேர்ந்துள்ளார் வைசாக். இந்த நிலையில் தற்போது கலிபா திரைப்படம் வரும் ஆகஸ்ட் 20ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !