உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் நாயகனாக நடிக்கும் பிரேம்ஜி

மீண்டும் நாயகனாக நடிக்கும் பிரேம்ஜி


பேட்லர்ஸ் சினிமா சார்பாக, இயக்குனர் கருப்பையா முருகன் தயாரித்து இயக்கி, பிரேம்ஜி நடிப்பில் வெளியான படம் வல்லமை. தற்போது இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

மியூசிக்கல் ஹாரராக உருவாகும் இந்தப் படத்திற்கு சூரஜ்நல்லுசாமி ஒளிப்பதிவு செய்கிறார், பிரேம்ஜி இசையமைத்து ஹீரோவாக நடிக்கிறார். பேட்லர்ஸ் சினிமா சார்பாக எழுதி, இயக்கி, தயாரிக்கிறார் கருப்பையா முருகன்.

மற்ற நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு துவங்கி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !