தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவக் கதையா ராதிகாவின் ‛காலனி'
ADDED : 7 hours ago
சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா நடித்து வெளியான ‛தாய் கிழவி' படம் சூப்பர் ஹிட்டாகி, 75 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்தது. இந்தாண்டில் இதுவரை வெளியான ஹிட் படங்களில் இதுவும் ஒன்றாக உள்ளது. இந்த படத்திற்கு பின் ராதிகாவை தேடி நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன.
இந்நிலையில் நயன்தாராவை வைத்து ‛அறம்' படத்தை இயக்கிய கோபி நயினார் அடுத்து ராதிகாவை வைத்து ‛காலனி' என்ற படத்தை இயக்குகிறார். இதில் ராதிகா கதையின் நாயகியாக நடிக்கிறார். படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் வீடியோவை வெளியிட்டுள்ளனர். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் இப்படத்தில் முக்கிய விஷயமாக இருக்கும் என போஸ்டர் பிரதிபலிக்கிறது. சிறிய இடைவெளிக்கு பின் தேவா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.