உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'முட்ட கலக்கி'

100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'முட்ட கலக்கி'


கென் கருணாஸ் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், கென் கருணாஸ், சுராஜ் வெஞ்சாரமூடு மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் 'யூத்'.

இப்படத்தில் இடம் பெற்ற 'முட்ட கலக்கி' பாடல் பிப்ரவரி மாதம் யு டியூப் தளத்தில் வெளியிடப்பட்டது. வெளியான இரண்டு மாதங்களில் இப்பாடல் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

கென் கருணாஸ் எழுதி, பாடியுள்ள இந்தப் பாடல் இளம் ரசிகர்களிடம் பெரும் வரவற்பைப் பெற்றது. அவரது அறிமுக இயக்கத்தில் வெளியான படத்தின் பாடலுக்கு இப்படியான வரவேற்பு ஆச்சரியம்தான். அது மட்டுமல்ல இந்த ஆண்டில் இதுவரையில் வெளியான படங்களின் பாடல்களில் இந்த வருடத்தின் முதல் 100 மில்லியன் பாடல் இதுதான் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.

ஜிவி பிரகாஷ்குமார் இசையில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 12வது பாடல் இது. அவரது இசையில் கடந்த வருடம் வெளிவந்த 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' பாடலின் வீடியோ 280 மில்லியன் பார்வைகளையும், அதன் லிரிக் வீடியோ 175 மில்லியன் பார்வைகளையும் கடந்துள்ளது. அவரது இசையில் வெளியான பாடல்களில் அதிகப் பார்வைகளைப் பெற்ற பாடலாக இந்தப் பாடல் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !