தமிழ் சினிமாவின் ‛துரந்தர்', ‛மிஸ்டர். எக்ஸ்' : இயக்குனர் மனு ஆனந்த்
ADDED : 3 hours ago
மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா, கவுதம் ராம் கார்த்திக், மஞ்சு வாரியர், சரத்குமார், அனைகா, ரைசா வில்சன் உள்ளிட்டோர் நடித்து ரிலீசுக்கு தயாராகவுள்ள படம் ' மிஸ்டர்.எக்ஸ்' . இந்த படம் ஏப்ரல் 17ம் தேதியன்று திரைக்கு வருவதை முன்னிட்டு தற்போது படக்குழு பேட்டி அளிக்க தொடங்கியுள்ளனர்.
மனு ஆனந்த் கூறியதாவது, சமீபத்தில் திரைக்கு வந்த துரந்தர் படம் எப்படி ஒரு உண்மையான உளவாளி கதையை மையமாக கொண்டு உருவாக்கினார்களோ அதற்கு எந்தவிதத்திலும் குறையாமல் மிஸ்டர் எக்ஸ் படமும் உளவாளியின் உண்மை கதையை கையில் எடுத்து அதில் சில கற்பனையும் சேர்த்து திரைக்கதை எழுதி 2023ம் ஆண்டில் துவங்கினோம். இது ஒரு ஜேம்ஸ் பாண்ட் படம் போல் இருக்கும். குறிப்பாக இந்த கதையில் 1960ல் இருந்து 2022ம் ஆண்டு வரை நடந்த பல சுவாரஸ்யமான உளவாளியின் சிறந்த விஷயங்களை வைத்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.