வாழ்வில் சோர்வு ஏற்பட்டால் அழுவேன் : கவுதம் ராம் கார்த்திக் ஓப்பன் டாக்
மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா, சரத்குமார், கவுதம் ராம் கார்த்திக் , மஞ்சு வாரியார் நடிப்பில் உருவாகி உள்ள மிஸ்டர் எக்ஸ் படம் ஏப்ரல் 17ம் தேதி ரிலீஸாகிறது. கவுதம் ராம் கார்த்திக் நடித்த பேட்டியில் கூறியது : இப்பொழுது மிஸ்டர் எக்ஸ், ரூட் லெகசி , பிளடி பாலிடிக்ஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். இதில் மிஸ்டர் எக்ஸ் பக்கா ஆக் ஷன் படம், இந்த படத்திற்கான ஆக் ஷன் காட்சியில் எனக்கு அடிபட்டது. இந்த கேரக்டர் நெகட்டிவ் மாதிரி தெரியும், பாசிட்டிவ் ஆகவும் இருக்கும் அது ரசிகர்கள் பார்வையை பொறுத்தது.
இதில் ஆர்யா, சரத்குமார் உள்ளிட்ட அனைவருடன் நடித்து விட்டேன். ஆனால் மஞ்சுவாரியாருடன் மட்டும் எனக்கு சீன் இல்லையே என்ற ஏக்கம் இருக்கிறது. இந்த படம் அளவுக்கு உடல் அளவில் வேறு எந்த படத்திற்கும் கஷ்டப்படவில்லை. ஆக் ஷன் காட்சிகள் அந்த அளவுக்கு பக்காவா இருக்கும். சென்னை தூத்துக்குடியில் படப்பிடிப்பு நடந்தது
கவுதம் என்ற என் பெயருடன் தாத்தா முத்துராமனில் இருந்து ராம், அப்பா கார்த்திக் சேர்த்து கவுதம் ராம் கார்த்திக் என மாற்றி வைத்துள்ளேன். ரொமான்ஸ் காமெடி படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது, விரைவில் நடக்கலாம். தாத்தா முத்துராமனை ஏஐ கேரக்டரில் இணைந்து நடிக்க ஆர்வமில்லை. ஏதாவது தவறாக வந்து விடக்கூடாது என பயம் இருக்கிறது.
அப்பா நடித்ததில் கோபுரத்தில் சீதை, உள்ளத்தை அளித்த தா, சோலைக்குயில் உள்ளிட்ட படங்கள் பிடிக்கும். என் மனைவி மஞ்சிமா மோகன் எனக்கு உறுதுணையாக இருக்கிறார். கதை உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் அவரிடம் கேட்டு தான் முடிவு எடுக்கிறேன். வாழ்க்கையில் சில விஷயங்களில் சோர்வு ஏற்பட்டால் ஐந்து நிமிடம் அழுவேன். அப்போது என்னுடன் இருப்பவர்கள் என் மனைவி, என்னை தேடுவார்கள், பின் வழக்கம்போல் உற்சாகமாகி விடுவேன். நீண்ட டிராவல் அதுவும் காரில் புதுச்சேரி வரை செல்வது எனக்கு மிகவும் பிடிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.