உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : திரைப்படமான முதல் சமூக தொடர்கதை

பிளாஷ்பேக் : திரைப்படமான முதல் சமூக தொடர்கதை

அந்த காலத்தில் வார இதழ்களில் வரும் தொடர் கதைகளுக்கு சினிமாவுக்கான மரியாதை இருந்தது. மக்கள் ஒரு வாரம் வரை பதைபதைப்புடன் காத்திருந்து தொடர் கதைகளை படித்தார்கள். அப்படி பிரபலமான பல தொடர் கதைகள் சினிமாவானது. கல்கியின் 'பொன்னியின் செல்வன்', சாண்டில்யனின் 'கடல்புறா', இப்படி பல தொடர் கதைகள் சினிமா ஆனது. அதில் முக்கியமானது சமூக தொடர் கதையான 'அபலை அஞ்சுகம்'.

'கல்கி'யில் வெளியான இந்த தொடரை கி.ரா.கோபாலன் எழுதியிருந்தார். 'தூக்கு தூக்கி' என்ற ஒரே படத்தின் மூலம் அன்றைக்கு லட்சாதிபதியான ஆர்.கிருஷ்ணசாமி இந்த படத்தை இயக்கி, தயாரித்தார், டி.ஆர்.மகாலிங்கம், சவுகார் ஜானகி, எம்.என்.ராஜம், டி.ஏ,மதுரம் நடித்தனர். ஒரு சின்ன திருட்டுக்காக ஒரு மாதம் சிறைக்கு சென்று வந்த ஒரு பெண்ணின் வாழ்க்கை என்ன ஆனது என்பதுதான் படத்தின் கதை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !