sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 20, 2025 ,புரட்டாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

ஜோசியம்

/

மாத ராசி பலன்

/

கடகம்

/

கடகம்

மாத ராசி பலன்

மேஷம்

மேஷம்

கடகம்

கடகம்

மாத ராசி பலன் : கடகம்
16 செப் 2025

முந்தய மாத ராசி பலன்

rasi

கடகம்

கடகம்

புனர்பூசம் 4 ம் பாதம்
தெளிவான சிந்தனையும் பிறருக்கு வழிகாட்டும் மனமும் கொண்ட உங்களுக்கு புரட்டாசி நன்மையான மாதம். அக். 9 வரை விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு செலவுகளை ஏற்படுத்தினாலும் அவையெல்லாம் சுபச் செலவாகவே இருக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள், வாழ்க்கைக்குத் தேவையான இடம், வீடு, பிள்ளைகளின் கல்வி,  சுபநிகழ்ச்சிகள் என்று செலவுகள் ஏற்படும். அதே நேரத்தில் 4, 6, 8 ம் இடங்களை விரய குரு பார்ப்பதால், மனதில் நிம்மதி, சந்தோஷம், தெளிவு இருக்கும். உடல் நிலையில் இருந்த பாதிப்பு விலகும். எதிர்ப்பு, போட்டி, விரோதம் என்றிருந்த விஷயங்களில் சாதகமான நிலை ஏற்படும். இழுபறியாக இருந்த வழக்கு வெற்றியாகும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். வரவேண்டிய பணம் வரும். அக். 8 முதல் ஜென்ம ராசிக்குள் அதிசாரமாக சஞ்சரிக்கும் குரு 5, 7, 9 ம் இடங்களைப் பார்ப்பதால் குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். பூர்வீகச் சொத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட விரிசல் விலகும். நண்பரால் ஆதாயம் அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பு உண்டாகும். கோயில் வழிபாட்டில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும். தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதும், பேச்சில் நிதானம் காப்பதும் நல்லது.  உங்கள் செல்வாக்கு மூலம் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.
சந்திராஷ்டமம்: அக். 3.
அதிர்ஷ்ட நாள்: செப். 20, 21, 29, 30. அக். 2, 11, 12.
பரிகாரம் காளத்தீஸ்வரரை வழிபட சங்கடம் தீரும். நன்மை உண்டாகும்.

பூசம்
எந்த ஒன்றிலும் நிதானமாகவும் அதே நேரத்தில் உறுதியாகவும் செயல்பட்டு வெற்றி அடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் மாதமாகும். அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் சனி வக்ரம் அடைந்திருந்தாலும் அங்கு ராகு சஞ்சரிப்பதால் நெருக்கடிகள் பிரச்சனைகள் என்று ஏற்பட வாய்ப்புகள் இருந்தாலும், விரய குருவின் பார்வை அஷ்டம ஸ்தானத்திற்கு கிடைப்பதால் நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று உங்களுக்கு யோக பலன்களே உண்டாகும். பொன் பொருள் சேரும். திடீர் வாய்ப்புகள் தேடி வரும். உங்கள் தன குடும்பாதிபதி சூரியன் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். தன்னம்பிக்கையும் துணிச்சலும் அதிகரிக்கும். இதுவரை தடைபட்டு இழுபறியாக இருந்து வந்த வேலைகள் நடந்தேறும். உங்கள் வேலைகளுக்கு சகோதரர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபாரிகளுக்கு பணியாளர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள் என்பதால் லாபம் அதிகரிக்கும்.  செப். 29 முதல் புத்தி தாதா புதன் 4 ம் இடத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் புத்திசாலித்தனம் ஒவ்வொன்றிலும் வெளிப்படும். எந்த ஒன்றிலும் பின் விளைவுகள் பற்றி யோசித்து செயல்படுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் ஆதாயம் காண்பது எப்படி என்ற வழிமுறைகள் உங்களுக்கு தெரிய ஆரம்பிக்கும். நீண்ட நாள் முயற்சிகள் இப்போது நிறைவேறும். அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். அரசு வழியில் மேற்கொள்ளும் முயற்சிகள் சாதகமாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும்.
சந்திராஷ்டமம்: அக். 4.
அதிர்ஷ்ட நாள்: செப். 17, 20, 26, 29. அக். 2, 8, 11.
பரிகாரம் தர்பாரண்யேஸ்வரரை வழிபட பயம் தீரும். உடலில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும்.

ஆயில்யம்
எதிலும் புத்திசாலித்தனமாக செயல்பட்டு ஆதாயம் அடையும் உங்களுக்கு, புரட்டாசி அதிர்ஷ்டமான மாதமாகும். செப்.29 முதல் சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் புதனால் செல்வாக்கு உயரும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். நெருக்கடி நீங்கும். பொருளாதார நிலை உயரும். கலைஞர்கள், வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். எந்த வேலையை எப்படி செய்து முடிப்பது என்பதை அறிந்து செயல்பட்டு ஆதாயம் அடைவீர்கள். உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும். அதே நேரத்தில், மாதம் முழுவதும் சூரியன் மூன்றாம் இடத்தில் சஞ்சரிப்பதால் எடுத்த வேலைகள் தடையின்றி நடந்தேறும். இழுபறியாக இருந்த முயற்சிகள் வெற்றியாகும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு கிடைக்கும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் உண்டாகும். அக்.9 வரை தன குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரனால் பொருளாதார நிலை உயரும். எதிர்பார்த்த பணம் வரும். புதிய வாகனம், நவீன பொருட்கள் என்று வாங்கிடும் நிலை உண்டாகும். குரு பார்வை சாதகமாக இருப்பதால் வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். தம்பதிகளுக்குள் இணக்கம் உண்டாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். குழந்தைக்காக ஏங்கியவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். புரட்டாசி நன்மை நிறைந்த மாதமாக இருக்கும்.
சந்திராஷ்டமம்: அக். 5.
அதிர்ஷ்ட நாள்: செப். 20, 23, 29. அக். 2, 11, 14.
பரிகாரம் ஆண்டாள் அழகரை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் மாத ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us