ADDED : ஜூலை 23, 2023 04:03 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* அமைதியான மனதில் நல்ல சிந்தனைகள் ஓடும்.
* நாவை அடக்கினால் தீய உணர்வுகளை அடக்க முடியும்.
* இனிமையான பேச்சும் ஒரு விதத்தில் தர்மம்தான்.
* கொடுமைக்கு ஆளானவர்களின் பிரார்த்தனைக்கு அஞ்சுங்கள்.
* நன்மையை மட்டுமே நாணம் தரும்.
* தவறுதலாக தீமை செய்தால் அதை அழிக்க நன்மையைச் செய்யுங்கள்.
* கெட்ட நண்பனுடன் இருப்பதை விட தனிமையாய் இருப்பதே மேல்.
* காலத்தைக் கணிப்பதற்கும் வெளிச்சத்தை தருவதற்கும்தான் சூரியனும் சந்திரனும் படைக்கப்பட்டன.
* மறுமைநாளை ஏற்றுக்கொள்பவர்கள் பிறருக்கு நல்லவற்றைக் கூறவும்.
-பொன்மொழிகள்