sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கட்டுரைகள்

/

பாங்கின் சிறப்பு

/

பாங்கின் சிறப்பு

பாங்கின் சிறப்பு

பாங்கின் சிறப்பு


ADDED : நவ 03, 2023 11:46 AM

Google News

ADDED : நவ 03, 2023 11:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடமையாக உள்ள தொழுகைக்கு பாங்கும் இகாமத்தும் சொல்ல வேண்டும்.

பாங்கு (அதான்) என்பது தொழுகைக்கு மக்களை அழைப்பது. இகாமத் என்பது தொழுகை துவங்குவதற்கு முன் கூறப்படும் வாசகம்.

* கியாமநாளில் மக்கள் துன்பத்திலும், துயரத்திலும் உழன்று கொண்டிருக்கும் சமயத்தில், பள்ளிவாசலில் பாங்கு சொல்லும் முஅத்தின்கள் கஸ்துாரி (மணம் கமழும்) மேடைகளில் உட்கார்ந்திருப்பார்கள். அவர்களுக்கு எந்த பயமும், துன்பமும் நிகழாது.

* பாங்கொலி கேட்டு எவர் பேசுகின்றாரோ, அவருக்கு மரண வேளையில் கலிமா நாவில் வர தடையாக இருக்கும்.

* (முஅத்தின்) பாங்கு சொல்லும் சப்தத்தை கேட்டால், (முஅத்தின்) சொல்வதைப் போல் பதில் சொல்லுங்கள்.

* பாங்கு, முன் அணி (ஜமாஅத்துத் தொழுகையின் முதல் அணி) இவ்விரண்டின் நன்மைகளை மக்கள் அறிய மாட்டார்கள். அதை தெரிந்து கொண்டால் அந்த நன்மைகளை பெறுவதற்காக, தங்களுக்குள் சீட்டுக் குலுக்கி முன் அணி வர முயற்சிப்பார்கள்.

* பாங்கு சொல்பவரின் குரல் கேட்கிற துாரத்தில் இருக்கின்ற ஜின்னும், மனிதனும் கியாமநாளில் அவருக்காக சாட்சி சொல்வார்கள்.

* பாங்கு சொல்பவர் கியாம நாளில் கழுத்து நீண்டவராக இருப்பார்.

* பாங்கு, தல்பியா சொல்பவரும் மண்ணறைகளில் இருந்து வெளியேறும்போது, பாங்கு சொல்பவர் பாங்கு கூறிக்கொண்டும் தல்பியா சொல்பவர் தல்பியா சொல்லிக் கொண்டும் வருவார்கள்.

* பாங்கிற்கும் இகாமத்திற்கும் இடையில் வேண்டும் துஆ பிரார்த்தனை மறுக்கப்படுவதில்லை.

* ஒருவர் பன்னிரண்டு ஆண்டுகள் பாங்கு சொன்னால் அவருக்கு சுவர்க்கம் நிச்சயம் உண்டு. அவருக்கு ஒவ்வொரு நாளும் அறுபது நன்மைகள் பதிவு செய்யப்படுகிறது.






      Dinamalar
      Follow us