அப்துல்லாஹ் இப்னு குலாபா என்பவரின் ஒட்டகம் காணாமல் போனது. அதைத் தேடி பாலைவனத்திற்குள் சென்ற போது அங்கே அழகிய நகரம் இருப்பதைக் கண்டார்.
ஆனால் அங்கு மனிதர்கள் யாரும் காணவில்லை. பாதுகாப்புக்காக வாளைக் கையில் வைத்தபடி நடந்தார். ஓரிடத்தில் வைரம், வைடூர்யம், மரகதம் என நவரத்தினங்கள் குவிந்து கிடந்தன. அதைக் கை நிறைய அள்ளிக் கொண்டு நடந்தார்.
அந்த நவரத்தினத்தை காட்டிய போது , 'இவருக்கு புதையல் கிடைத்துள்ளது' என மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். இந்த விஷயம் கேள்விப்பட்ட கவர்னர் ஹஜ்ரத் முஆவியா ரகசியமாக விசாரிக்க வந்தார். மேலும் வரலாற்று ஆய்வாளர் கஅப் அஹ்பாரிடம் கேட்டார். அதற்கு அவர், ''புதையல் கிடைத்தது உண்மையே. அங்கு தான் ஆது சமுதாயத்தைச் சேர்ந்த ஷத்தாத் கட்டிய சொர்க்கம் உள்ளது.
ஆனால் உலகின் பார்வையில் இருந்து இறைவன் அதை மறைத்து வைத்திருந்தான். ஆனால் ஒருவரின் கண்களுக்கு மட்டும் அந்த சொர்க்கம் தெரியும். சிவந்த நிறமும், நீலநிறக் கண்களையும் கொண்ட அவருக்கு உதடு, கழுத்தில் பெரிய மச்சம் இருக்கும். காணாமல் போன ஒட்டகத்தை தேடிச் செல்லும் போது அந்த சொர்க்கத்தைக் காண்பார்'' என்றார்.
பின்னர் குலாபாவைக் கண்ட ஆய்வாளர், ''நான் கூறிய அடையாளங்களைக்
கொண்டவர் இந்த நபர் தான்'' எனத் தெரிவித்தார். சபையில் இருந்த மக்கள் அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.