
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சந்தையில் கூட்டம் அதிகமாக இருந்தது. அங்கு வந்த முல்லா கூட்டத்தினரிடம், ''யாராவது உழைக்காமல் வாழ ஆசைப்படுகிறீர்களா... அவர்கள் வலது கையை துாக்குங்கள்''என்றார். அனைவரும் கையைத் துாக்க, பதில் சொல்லாமல் முல்லா நடந்தார். இதைக் கண்டு மக்கள் ஆரவாரம் செய்தனர். உடனே அவர், '' எத்தனை சோம்பேறிகள் இருக்கிறார்கள் என்பதை அறிய விரும்பினேன். இப்போது தான் தெரிகிறது.
நீங்கள் சோம்பேறிகள். உழைக்க மனம் இல்லாதவர்களிடம் நான் பேச விரும்பவில்லை'' எனக் கோபமுடன் மீண்டும் நடக்க ஆரம்பித்தார்.