ஹஜ்ரத் மூஸா நபி ஒருமுறை, ''இஜ்ராயீலே... உயிரைப் பறிக்கும் உமக்கு எப்போதாவது அனுதாபம் வந்தது உண்டா'' எனக் கேட்டார்.
''இரண்டு முறை ஏற்பட்டது. கப்பல் ஒன்று உடைந்த போது பயணிகள் நீரில் மூழ்கிக் கொண்டிருந்தனர். அதில் ஒரு கர்ப்பிணி மரப்பலகை ஒன்றைப் பிடித்தபடி மிதந்தாள். திடீரென அவளுக்கு பிரசவ வலி வர, சற்று நேரத்தில் ஆண் குழந்தை பிறந்தது.
அடுத்த நிமிடமே அவளது உயிரைப் பறிக்கும்படி எனக்கு ஆணை வந்தது. அவளைக் கண்டு பரிதாபப்பட்டேன். இதே போல சிரமப்பட்டு சுவர்க்கத்தை கட்டினான் ஷத்தாத். ஆனால் சுவர்க்கத்திற்குள் நுழையும் முன் அவனது உயிரை பறிக்கிறோமே என வருந்தினேன்.
அப்போது இறைவன், 'முன்பு பிரசவத்தில் இறந்த தாய் மீது அனுதாபம் கொண்டீரே... அந்த குழந்தையே(ஷத்தாத்) எனக்கு விரோதமாக செயல்பட்டு சுவர்க்கத்தை கட்டினான். அவனது உயிரை பறிக்கவே மீண்டும் அனுதாபப்படுகிறீர் என்றான். இறைவனுக்கு மட்டும் எல்லாம் தெரியும் என்ற உண்மையை உணர்ந்தேன்'' என்றார் இஜ்ராயீல்.