
செப்.12 ஆவணி 27: மகாபரணி. கார்த்திகை விரதம். சங்கரன்கோவில் கோமதி அம்மன் தங்கப்பாவாடை தரிசனம். திருநெல்வேலி நெல்லையப்பர், காந்திமதி அம்மனுக்கு தாமிரபரணி ஆற்றில் திருமஞ்சனம். திருப்போரூர் முருகனுக்கு பால் அபிேஷகம். அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் சுந்தரவல்லி தாயார் புறப்பாடு.
செப்.13 ஆவணி 28: சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் வரதராஜப்பெருமாள், ஸ்ரீரங்கம் நம்பெருமாள், திருவள்ளூர் வீரராகவப்பெருமாளுக்கு திருமஞ்சனம். திருப்பரங்குன்றம் முருகன் மயில் வாகனம். கரிநாள்.
செப்.14 ஆவணி 29: முகூர்த்த நாள். மத்யாஷ்டமி, மகாவியதிபாதம். முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபடுதல். லட்சுமி பூஜை. மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு. திருத்தணி முருகன் பால் அபிஷேகம்.
செப்.15 ஆவணி 30: அவிதவா நவமி, பாஞ்சராத்திர ஜெயந்தி. சுமங்கலியாக இறந்த பெண்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுதல். மதுரை நவநீதகிருஷ்ணசுவாமி கோயிலில் உற்ஸவம் ஆரம்பம்.
செப்.16 ஆவணி 31: குரங்கணி முத்துமாலையம்மன் புறப்பாடு. சுவாமிமலை முருகன் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்க பூமாலை சூடியருளல். எம்.எஸ்.சுப்புலட்சுமி பிறந்த நாள்.
செப்.17 புரட்டாசி 1: ஷடசீதி புண்ணிய காலம், ஏகாதசி விரதம். ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். மதுரை கூடலழகர், அழகர்கோவில் கள்ளழகர் புறப்பாடு.
செப்.18 புரட்டாசி 2: சன்யஸ்த மகாளயம். திருப்பதி பெருமாள் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். திருத்தணி முருகன் பால் அபிஷேகம்.