sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 15, 2025 ,ஆவணி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்

/

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : செப் 11, 2025 01:38 PM

Google News

ADDED : செப் 11, 2025 01:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜி.சாவித்ரி, ஆவடி, திருவள்ளூர்: தொடர்ந்து ஐந்து பிரதோஷ விரதம் இருந்தால்.....

நீண்ட நாள் விருப்பமும், சுபநிகழ்ச்சியும் நிறைவேறும்.

வி.சரோஜாதேவி, ராம்நகர், பெங்களூரு: ராஜாங்கம், ஆண்டிக் கோலத்தில் பழநி முருகன் ஏன் இருக்கிறார்?

மனிதன் உயர்ந்தாலும், தாழ்ந்தாலும் தைரியமாக இருக்க வேண்டும் என்பதற்காக.

எல்.சச்சு, திருநாவலுார், கள்ளக்குறிச்சி: சுவாமிக்கு தேங்காய் உடைக்கும் போது, அது சிதறியது. பரிகாரம் உண்டா...

பரிகாரம் தேவையில்லை. கஷ்டம் விலகுவதாக எண்ணுங்கள்.



என்.லட்சுமி, நங்கநல்லுார், சென்னை: பெண்கள் மஞ்சள் பூசுவது ஏன்?

மஞ்சள் பூசினால் முகம் அழகு பெறும். அத்துடன் குங்குமமும் இடுங்கள்.

சி.நிர்மலா, பரமக்குடி, ராமநாதபுரம்: கர்ப்பிணிகளுக்கு ஆன்மிக ரீதியான அறிவுரை உண்டா...

தேவாரம், திருவாசகப் பாடலை கேளுங்கள். பக்தி, ஒழுக்கமுள்ள குழந்தை பிறக்கும்.

எம்.பத்மினி, குளச்சல், கன்னியாகுமரி: குழந்தை அடிக்கடி அழுகிறதே...

தன் தேவையை அழுகை மூலமாக குழந்தை சொல்கிறது. விரும்பினால் வெள்ளி அன்று அம்மன் கோயிலில் விளக்கேற்றுங்கள்.

ஆர்.விஜயலட்சுமி, கோவில்பட்டி, துாத்துக்குடி: அமாவாசை அன்று விரதம் இருக்கலாமா?

தந்தை இருப்பவர்கள் விரதம் இருக்க கூடாது.

டி.தேவிகா, சின்னமனுார், தேனி: தர்ப்பணம் செய்தால்...

முன்னோர் ஆசியால் உங்கள் சந்ததியே நலமாக வாழ்வர்.

கே.ஜெயசுதா, பல்லடம், திருப்பூர்: குருபூஜை என்றால்...

குருநாதரின் மறைவுக்கு பின், நினைவு நாளில் அவரை வழிபடுவது.






      Dinamalar
      Follow us