நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டு நிறுவனம் சார்பில் மது ஒழிப்பு முகாம் நடந்தது. அப்போது கண்ணாடி ஜாடியில் புழுக்களை இட்டு அதன் மீது சிறிது மதுவை ஊற்றினர். புழுக்கள் எல்லாம் துடிதுடித்து இறந்தன. இதை பார்த்துக் கொண்டிருந்த ஒருவரிடம், 'இதன் மூலம் என்ன புரிந்து கொண்டீர்கள்?' என முகாம் நடத்துபவர் கேட்டார்.
'மது குடித்தால் வயிற்றில் உள்ள புழுக்கள் சாகும்' என பதில் அளித்தார். மது குடித்தால் உயிருக்கே ஆபத்து என்ற உண்மை தெரிந்தும் இப்படி அலட்சியமாக இருக்கிறார்களே... என தொண்டு நிறுவனத்தினர் வருத்தப்பட்டனர். 'மது பிரியர்களைக் கண்டு ஐயோ பாவம்' என்கிறது பைபிள்.