நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பணம் தேடுவதை குறிக்கோளாகக் கொண்டவன் ஆல்பர்ட். அதற்காக நேர்மையை விட்டு விலகினான். ஆனால் மனதில் அமைதி இல்லை. சர்ச்சில் பிரார்த்தனை செய்து விட்டு பாதிரியாரிடம், 'நிம்மதிக்கு வழி சொல்லுங்கள்' எனக் கேட்டான். புத்தகம் ஒன்றை நீட்டினார். அதன் அட்டையில் 'அன்பைத் தேடுங்கள்' என்றிருந்தது. அதை சுட்டிக் காட்டிய அவர், 'அன்பை மறந்ததால் நிம்மதி போனது. பிறரை நேசி. நிம்மதி உன்னை தேடி வரும்' என்றார்.