
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உன்னிடம் குறை கண்டால்
என் குறையையே அது காட்டுமே
உன்பால் சினம் கொண்டால்
எனக்கு இரத்த அழுத்த தாக்கமே
உன்னை நினைத்து பொறாமையுற்றால்
என்னையே நான் வன்மத்தில் இழப்பேனே
உனக்கு இடர் கொடுத்தாலோ
என் மனசாட்சி எனைக் கொல்லுமே
உன்னை நிந்திக்க நேரமுமில்லை
என் மனதில் போட்டியும் இல்லை
எதிரி என்னும் முகவரியை
நான் கொடுத்தால்தானே எதிரியாவாய்
உன்னால் தீங்கு நேர்ந்தாலும்
என்னைக் காக்கும் என் அன்புள்ளமே
உடல் வேறு ஆனாலும்
உள்ளத்துள் உறையும் உண்மை ஒன்றே
வாழ்கவே வளமுடன் நீயுமே
இனிய உலகத்தை ரசித்து வாழ்வோமே
- தினமலர் வாசகி மாதங்கி சேஷமணி
Advertisement