/
உலக தமிழர்
/
அமெரிக்கா
/
செய்திகள்
/
சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கத்தின் தித்திக்கும் பொங்கல் திருவிழா!
/
சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கத்தின் தித்திக்கும் பொங்கல் திருவிழா!
சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கத்தின் தித்திக்கும் பொங்கல் திருவிழா!
சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கத்தின் தித்திக்கும் பொங்கல் திருவிழா!
பிப் 01, 2025

2025, ஜனவரி 19 ஆம் தேதி தாமஸ் எடிசன் மேல்நிலைப் பள்ளி கலையரங்கில் 2025 ஆம் ஆண்டின் சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் திருவிழா மிகக் கோலாகலமாக நடந்தது.
விழா நாள் அன்று காலையில் சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்பது மணி அளவில் ஒன்று கூடி விருந்தினர்களை மக்களை வரவேற்க தயாரானார்கள். அன்று காலை பதினொரு மணியிலிருந்து பன்னிரண்டு மணி வரை மதிய விருந்து நடந்தது. 'பிரியாணி எக்ஸ்பிரஸ்' உணவகத்தில் இருந்து மிகச் சிறப்பான விருந்து வரவழைக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டது.
மதியம் ஒரு மணி அளவில் விழாவுக்கு வந்திருந்த பெண்மணிகளை அழைத்து குத்துவிளக்கேற்றி விழா நிகழ்வுகள் தொடங்கியது. சங்க உறுப்பினர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாட அருமையாய் ஆரம்பித்தது.
சின்னஞ் சிறார்கள் விழாக்கு வந்திருந்த அத்தனை பேரையும் மிகவும் ரசிக்க வைத்தது. பரதநாட்டியமும், மேற்கத்திய நடனங்களும், ஆனந்த யாழ் குழுவினர் பாடிய பாடல்களும்,
அனைவரையும் பெரிதும் கவர்ந்தது. பங்கு கொண்டவர்களுக்கும், பயிற்சி அளித்தவர்களுக்கும் மிக்க வாழ்த்துக்கள். பின்பு சங்கத்தின் சில மாற்றங்களைக் கூற 'பொதுக்குழு கூட்டம்' நடைபெற்றது.
இவ்விழா சிறப்புடன் நடக்க, பெரிதும் காரணமாக இருந்தது சங்க உறுப்பினர்களும் தன்னார்வலர்களும் தான்! இவர்களில் சங்கத்தின் சிங்கங்களான 'இளைஞர் அணியின்' பணி சாலச் சிறந்தது! நுழைவாயிலில் இருந்து, அரங்கம், மேடைக்குப் பின்னால், உணவுக்களம் என அனைத்து பகுதிகளிலும் சிறுசிறு குழுக்களாக பிரிந்து பெரியவர்களின் அறிவுரைப்படி அழகாய் உதவிகள் புரிந்தனர். எதிர்கால தலைமுறை நம்பிக்கையை அளித்தது.
விழா முடிந்ததும் சிற்றுண்டியுடன் பொங்கல் என்பதால் சங்கத்தின் சார்பாக காலண்டர், கரும்பு வழங்கப்பட்டது. இவ்வாறு தித்திக்கும் பொங்கல் விழா இனிதே நிறைவுற்றது.
- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்
Advertisement