/
உலக தமிழர்
/
அமெரிக்கா
/
செய்திகள்
/
இந்தியத் தூதரக அதிகாரிகளுடன் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்க நிர்வாகிகள் சந்திப்பு!
/
இந்தியத் தூதரக அதிகாரிகளுடன் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்க நிர்வாகிகள் சந்திப்பு!
இந்தியத் தூதரக அதிகாரிகளுடன் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்க நிர்வாகிகள் சந்திப்பு!
இந்தியத் தூதரக அதிகாரிகளுடன் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்க நிர்வாகிகள் சந்திப்பு!
ஏப் 07, 2024

வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம் அமெரிக்காவின் மேரிலாந்து, வெர்ஜினியா மற்றும் வாசிங்டன் DC மாகாணத்தில் உள்ள தமிழர்களை “வாழ்க தமிழ்! வளர்க தமிழர் ஒற்றுமை!! என்ற தமிழ் உணர்வோடு இணைத்து அமெரிக்க வாழ் தமிழர்களிடையே தமிழர் கலைகள், கல்வி மற்றும் பண்பாடுகளையும் வளர்க்க இலாப நோக்கமற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனமாய் ஆரம்பிக்கப்பட்டுப் பல தன்னார்வலர்கள் கொண்ட நிர்வாக குழுவினரின் முயற்சியால் சிறப்பாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.
வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்க நிர்வாக இயக்குனர்கள் அறிவுமணி ராமலிங்கம் (தலைவர்), கவிதா சுப்பிரமணியம் (செயலாளர்), மற்றும் இயக்குநர்கள் குழு அறிவுடைநம்பி புகழேந்தி, பாலாஜி துரைசாமி, மோகன்ராஜ் அண்ணாமலை மேலும் சிறப்பு விருந்தினர்கள் பத்மஸ்ரீ டாக்டர். பி. ரகு ராம் OBE (நிர்வாக இயக்குநர் - KIMS மருத்துவமனைகள்), மற்றும் டாக்டர். S வைஜயந்தி MD உட்படப் பலர், ஏப்ரல் 5, 2024 வெள்ளியன்று, இந்தியத் தூதரகத்தின் மதிப்பிற்குரிய ஆலோசகர்கள் ஜிகர் பிரதீப்குமார் ராவல் (முதல் செயலாளர் - ITOU), முனைவர் விஜயபாஸ்கர் நாராயணமூர்த்தி (ஆலோசகர் - பாதுகாப்பு தொழில்நுட்பம்), மற்றும் முனைவர் பி. கருணாகரன் (ஆலோசகர் - பணியாளர் மற்றும் கல்வி) உடன் பயனுள்ள அமர்வை நடத்தியுள்ளனர்.
இந்தியத் தூதரகம் மற்றும் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம் ஆகியவற்றுக்கு இடையே புரிதல் மற்றும் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்காக, வாசிங்டன்-டிசி அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் ஒரு முறையான செயல்முறைக் கூட்டம் நடத்தப்பட்டது. வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கப் பகுதியில் உள்ளத் தமிழ்ச் சமூகத்தை வலுப்படுத்தப் புதுமையான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப் பட்டது. இந்த அமர்வு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது எனவும் ஒரு வலுவான தமிழ்ச் சமூகத்தைக் கட்டியெழுப்பவும், வாசிங்டன் வட்டாரப் பகுதியிலும் மற்றும் அமெரிக்கா முழுவதிலும் உள்ள அடுத்த தலைமுறை தமிழர்களின் வளர்ச்சியை வளர்ப்பதற்கும் இந்தியத் தூதரகங்களோடு ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத் தலைவர் அறிவுமணி ராமலிங்கம் தெரிவித்தார். மேலும், இந்த சந்திப்பு மன நிறைவோடும் மகிழ்ச்சியுடனும் இருந்ததாகவும் வெளிப்படுத்தினார்.
-நமது செய்தியாளர் முருகவேலு வைத்தியநாதன்
Advertisement