/
உலக தமிழர்
/
சிங்கப்பூர்
/
செய்திகள்
/
சிங்கப்பூர் ஸ்ரீ ராமர் ஆலயத்தில் ஸ்ரீ ஐயப்பன் பூஜை கோலாகலம்
/
சிங்கப்பூர் ஸ்ரீ ராமர் ஆலயத்தில் ஸ்ரீ ஐயப்பன் பூஜை கோலாகலம்
சிங்கப்பூர் ஸ்ரீ ராமர் ஆலயத்தில் ஸ்ரீ ஐயப்பன் பூஜை கோலாகலம்
சிங்கப்பூர் ஸ்ரீ ராமர் ஆலயத்தில் ஸ்ரீ ஐயப்பன் பூஜை கோலாகலம்
டிச 22, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கப்பூர் சாங்கி ஸ்ரீ ராமர் ஆலயத்தில் ஸ்ரீ ஐயப்பன் பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. காலையில் மூல மந்திர ஹோமமும் சிறப்பு நெய் அபிசேகமும் பக்தப் பெருமக்களின் “ சாமியே சரணம் ஐயப்பா ... பொன் ஐயப்பா சரணம் “ எனும் சரண கோசம் முழங்க கண்கொள்ளாக் காட்சியாக நடைபெற்றன. மாலையில் பதினெட்டாம் படி பூஜை கோலாகலமாக நடைபெற்றது. ஐயப்ப பக்தர்களின் பஜனை மெய்சிலிர்க்குமாறு உருக்கத்தோடு நடைபெற்றது. ஏற்பாடுகளை ஆலய நிர்வாகம் சிறப்பாகச் செய்திருந்தனர்.
- நமது செய்தியாளர் வெ.புருசோத்தமன்
Advertisement