/
உலக தமிழர்
/
சிங்கப்பூர்
/
செய்திகள்
/
"வாழ்வியல் இலக்கிய பொழில்" அமைப்பு விழா கொண்டாட்டம்
/
"வாழ்வியல் இலக்கிய பொழில்" அமைப்பு விழா கொண்டாட்டம்
"வாழ்வியல் இலக்கிய பொழில்" அமைப்பு விழா கொண்டாட்டம்
"வாழ்வியல் இலக்கிய பொழில்" அமைப்பு விழா கொண்டாட்டம்
ஆக 17, 2025

'வாழ்வியல் இலக்கியப் பொழில்' அமைப்பின் 94ஆவது மாதாந்திர நிகழ்ச்சி (ஆக.16) (சனிக்கிழமை) மாலை 6.00 மணிக்கு பொங்கோல் சமூக மன்றத்தில் நடைபெற்றது.
'மூப்பில்லா முதல்மொழியே' என்ற சிங்கப்பூர்த் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலோடு தமிழன்னைக்கு வரவேற்பு. பொதுப் பிரிவில், முத்துக்குமார் கிருஷ்ணா சங்கீதம் புல்லாங்குழல் வாசித்தார். முத்துக்குமார் மகிழினி நாட்டுப்புற பாடலுக்கு நடனம் ஆடினார்.
அதனை தொடர்ந்து அமைப்பின் உறுப்பினர் அஜிதா முத்துக்குமார் மாலைப்பொழுதில் இலக்கியப் பொழிலில் இளைப்பாற நேரில் மற்றும் இணையம் வழி இணைந்தோர் யாவரையும் வரவேற்று மகிழ்ந்தார். தொடர்ந்து வாழ்வியல் இலக்கியப்பொழிலின் 'பொழில் வாழ்த்துப் பாடல்” இசைக்கப்பட்டது.
நிகழ்ச்சியின் தொடக்கமாக, இந்த மாதம் 'இயலும் இசையும்' என்னும் தலைப்பில் சிறப்புரை இடம்பெற்றது. இதில் சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராக பணிபுரியும் முனைவர் கி. துர்காதேவி பல்வேறு இலக்கியப் பாடல்களுக்கு இணைப்புரை வழங்க, சென்னையில் சரஸ்வதி வீணை இசைப் பள்ளி நடத்திவரும் மதிப்புறு முனைவர் N. விஜயலட்சுமி வீணை மீட்க நெகிழ்வுடன் இருந்தது. தொடர்ந்து சிறுவர்கள் அங்கத்தில், விக்ரம் தியா 'மூவேந்தர் சிறப்பு' பற்றிய தாலாட்டு பாடலைப் பாடினார்.
விக்ரம் கிருஷ் 'வெற்றி வேற்கை' கூறினார். மேகவர்தினி அருள்பிரகாஷ் 'நன்னெறி பாடல்' சிலவற்றைப் பாடினார். தமிழோவியா அருள்பிரகாஷ் 'ஆத்திச்சூடி' கூறினார். கிருஷிகா ஸ்ரீதர் 'பஞ்சதந்திரக் கதை' ஒன்றைக் கூறினார். கோகுலமித்ரா தினேஷ் குமார் சிந்துஜா 'இலக்கியக் கதை' கூறினார். முகமது முஹஃபிஸ் மற்றும் முகமது முகாய்மின் இருவரும் சேர்ந்து 'வாழ்க நிரந்தரம் தமிழே எங்கள் உயிரே' என்ற பாடலை அழகுற பாடினர். மாதவ வீரா 'ஓடி விளையாடு பாப்பா' பாடலைப் பாடினார்.
தொடர்ந்து வந்த பாவலர் எல்ல. கிருஷ்ணமூர்த்தி அவர்களுடைய அறிமுகவுரையில் 'தீ' என்னும் தலைப்பில் பல்வேறு இலக்கியக் குறிப்புகளுடன் அழகுற பேசினார்.
SG60 சிறப்புப் போட்டிகளிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. சிங்கப்பூர் தொடர்பான கேள்வி-பதில் போட்டி; தம் வாழ்நாளில் பயன்படுத்திய அல்லது பயன்படுத்த விரும்பும் திருக்குறள்/ நாலடியார் பற்றிய ஓரிரு நிமிட காணொளி என இரு பிரிவுகளாக நடத்தப்பட்டன. கவிஞர் மதியழகன் சிறப்பாக பாடிய முகமது முஹஃபிஸ் மற்றும் முகமது முகாய்மின் இருவருக்கும் சிறப்புப் பரிசுகள் வழங்கி மகிழ்ந்தார்.
நிகழ்ச்சியின் காணொளி முகநூல் வழியாக நேரலையாகவும் ஒளிபரப்பட்டது. மேலும், இந்நிகழ்ச்சி பொழில் பண்பலையில் நேரலையாக ஒலிபரப்பட்டது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழ் சான்றோர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கேட்டு மகிழ்ந்தனர்.
நிகழ்ச்சியின் தொடக்கம் முதலே, மோகனபிரியா ராமலிங்கம் மற்றும் பழ.அழகுராஜ் அழகுற நிகழ்ச்சியை நெறிப்படுத்தினர். மோகனபிரியா ராமலிங்கம் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட யாவருக்கும் மறவாமல் நன்றி கூறினார். அதனைத் தொடர்ந்து ஆகஸ்டு மாதம் பிறந்தநாள் கொண்டாடும் முகமது முஹஃபிஸ் மற்றும் முகமது முகாய்மின் ஆகியோருக்குப் பிறந்தநாள் வாழ்த்துப் பாடலுடன் சிறப்பான முறையில் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
முகநூலில் கண்டுகளிக்க:
https://www.facebook.com/share/v/14G658dEKu5/
அமைப்பின் இணையப்பக்கம்: https://www.ilakkiyapozhil.com
நமது வாசகர்- பாவலர் எல்ல. கிருஷ்ணமூர்த்தி
வாழ்வியல் இலக்கியப் பொழில், சிங்கப்பூர்.
Advertisement