/
உலக தமிழர்
/
சிங்கப்பூர்
/
செய்திகள்
/
சிங்கப்பூர் காளியம்மன் ஆலயத்தில் சந்தனக்குட அபிஷேக கோலாகலம்
/
சிங்கப்பூர் காளியம்மன் ஆலயத்தில் சந்தனக்குட அபிஷேக கோலாகலம்
சிங்கப்பூர் காளியம்மன் ஆலயத்தில் சந்தனக்குட அபிஷேக கோலாகலம்
சிங்கப்பூர் காளியம்மன் ஆலயத்தில் சந்தனக்குட அபிஷேக கோலாகலம்
ஆக 11, 2025

சிங்கப்பூர்: கருணையே வடிவாக சிங்கப்பூர் தொபாயோ பகுதியில் வைராவி மட காளியம்மன் ஆலயத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அன்னை ஸ்ரீ காளிகாம்பாள் ஆடித் திங்களில் பல்வேறு வடிவினில் காட்சி அருளி மகிழ்விக்கிறார். ஆக- 9 சந்தனக்குட அபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
காலை 7 மணிக்கு சங்கல்பம் - விக்னேஸ்வர பூஜை - சிறப்பு ஹோமத்துடன் நிகழ்வு கோலாகலமாகத் தொடங்கியது. 8.30 மணிக்கு ஸ்ரீ அம்பிகைக்கு சந்தனக் குட அபிஷேகம் கண்கொள்ளாக் காட்சியாக இடம் பெற்றது. ஒன்பது மணிக்கு லலிதா த்ரிசதி அர்ச்சனை மெய்சிலிர்க்க வைத்தது.
ஓம் சக்தி பராசக்தி ....ஓம் சக்தி பராசக்தி
இந்நிகழ்விடையே ஆகஸ்டு 8 ஆம் தேதி நடைபெற்ற பெரியாச்சி பூஜையின் போது பக்தர் ஒருவர் பூக்கரகம்- பூவோடு எடுத்து ஆலயம் வலம் வந்து ஆனந்தத் தாண்டவம் ஆடிய போது வசந்த மண்டபத்தில் நிரம்பி வழிந்த பக்தர் கூட்டம் உணர்வு பொங்க “ ஓம் சக்தி பராசக்தி ....ஓம் சக்தி பராசக்தி “ என முழங்கிய சரண கோஷம் விண்ணதிர வைத்தது. நாதஸ்வர - தவில் வித்துவான்களின் ராக தாள சமர்ப்பணத்திற்கிடையே ஸ்ரீ அன்னைக்கு மஹா தீபம் நடைபெற்றதைக் காணக் கண்கோடி வேண்டுமென பக்தப் பெருமக்கள் மகிழ்வெய்தினர்.
நிறைவாக அருட் பிரசாதம் பெற்ற பக்தப் பெருமக்களுக்கு அறுசுவை அன்ன பிரசாதமும் வழங்கப்பட்டது. தலைமை அர்ச்சகர் சந்தனக் குட அபிஷேக மகிமையை பக்தர்கட்கு விளக்கியமை பாராட்டுக்குரியது. ஆலய மேலாண்மைக் குழுவினர் மிகச் சிறப்பாக ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
-நமது செய்தியாளர் : வெ.புருஷோத்தமன்.
Advertisement