/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
மஸ்கட்டில் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
மஸ்கட்டில் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி
மே 03, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மஸ்கட்: ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட் இந்திய தூதரகத்தில் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியானது 11வது சர்வதேச யோகா தினம் அடுத்த மாதம் கடைப்பிடிக்கப்படுவதையொட்டி நடத்தப்பட்டது. இந்திய தூதர் ஜி.வி. ஸ்ரீனிவாஸ் தலைமை வகித்தார். அவர் தனது உரையில் சர்வதேச யோகா தினத்தின் முக்கியத்துவம் குறித்து விவரித்தார்.
இந்த நிகழ்ச்சியில் யோகா பயிற்சியாளர்கள் எளிய வகை யோகாவை செய்து காண்பிக்க அதனை பின்பற்றி பொதுமக்களும், மாணவ, மாணவியரும் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement