/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
ஜெத்தா தமிழ் கலாச்சார மைய உழைப்பாளர் தின நிகழ்ச்சி
/
ஜெத்தா தமிழ் கலாச்சார மைய உழைப்பாளர் தின நிகழ்ச்சி
ஜெத்தா தமிழ் கலாச்சார மைய உழைப்பாளர் தின நிகழ்ச்சி
ஜெத்தா தமிழ் கலாச்சார மைய உழைப்பாளர் தின நிகழ்ச்சி
மே 03, 2025

ஜெத்தா தமிழ் கலாச்சார மையத்தின் சார்பாக உழைப்பாளர் தின நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பெரும் திரளாக தமிழ் மக்கள் கலந்து கொண்டனர். அமைப்பின் கெளரவ ஆலோசகர் ரஃபீக் ஹுசைனின் ஆலோசனைகளுடன், தலைவர் இஸ்மாயில் ஷெரிப் ஒருங்கிணைத்த இந்த நிகழ்ச்சி, துணைத் தலைவர் சீனி இப்ராஹிம் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் சவுதி தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. காஷ்மீர் (பகல்காம்) தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து, சிறுவன் ஜாபிர் ஜமீல்தீன் கிராத் ஓதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பொருளாளர் அல் அமீன் வரவேற்பு உரை நிகழ்த்தி, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியின் தலைமை உரையாக உழைப்பாளர் தினத்தின் முக்கியத்துவத்தையும் அதன் சிறப்பு அம்சங்களையும் சீனி இப்ராஹிம் உரையாற்றினார்.
ஜெத்தா தமிழ் கலாச்சார மையத்தின் கொள்கை விளக்கம் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து நிர்வாக குழு உறுப்பினர் சித்திக் அஹமது லெப்பை விளக்க உரையாற்றினார். மேலும் சவுதி அரேபியாவின் தொழிலாளர் நல சட்டத்தில் உள்ள சிறப்பு அம்சங்களை செயலாளர் அப்துல் சமதும், நாளைய நம்பிக்கையில் சேமிப்பின் பங்கு என்ற தலைப்பில் அதன் அம்சங்களையும் மற்றும் பயனுள்ள தகவல்கள் குறித்து அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜமீல்தீனும் சிறப்புரையாற்றினர்.
Universal Inspection Company Limited, MD & CEO பத்ருதீன் அப்துல் மஜீத் காணொளி மூலமாக தன் வாழ்த்துக்களை தெரிவித்து சிறப்புரையாற்றி, இந்த பயனுள்ள நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்த ஜெத்தா தமிழ் கலாச்சார மையத்தின் நிர்வாகிகள் அனைவரையும் பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக ஜித்தா தமிழ் சங்கத்தின் பொறியாளர் காஜா மைதீன், இந்தியன் வெல்பேர் ஃபாரத்தின் (IWF) தலைவர் அப்துல் மஜீத், செயலாளர் கீழை இர்பான், செந்தமிழ் நல மன்றம் நிர்வாகி ஷெரிப் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். இதனைத் தொடர்ந்து நிர்வாக குழு உறுப்பினர் முகம்மது உசேன் நன்றி உரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியில் இறுதியாக நிகழச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது. விருந்து உபசரிப்பு, அமைப்பின் செயற்குழு உறுப்பினர் அகமது இப்ராஹிம் மேற்பார்வையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் JTCC யின் நிர்வாகிகள் தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
-- தினமலர் வாசகர் அல் அமீன்
Advertisement