/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
துபாயில் வி.ஜி. சந்தோசத்துக்கு விருது
/
துபாயில் வி.ஜி. சந்தோசத்துக்கு விருது
ஜூன் 13, 2025

துபாய்: துபாயில் எம்.டி.எஸ். ஈவெண்ட்ஸ் மேனேஜ்மெண்ட் நிறுவனம் சார்பில் டாக்டர் வி.ஜி. சந்தோசம் எழுதிய 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' நூல் வெளியீட்டு விழா நடந்தது. விழாவுக்கு துபாய் கர்டின் பல்கலைக்கழகப் பொறியியல் மற்றும் ஆராய்ச்சித்துறை இயக்குநர் டாக்டர் சித்திரை பொன்செல்வன் தலைமை தாங்கி நூலை வெளியிட்டார். கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ. முகமது முகைதீன் டாக்டர் வி.ஜி.சந்தோசத்துக்கு தமிழ்ப் பண்பாட்டு தூதருக்கான அப்துல் கலாம் விருதை வழங்கி கவுரவித்தார். டாக்டர் வி.ஜி.சந்தோசம் ஏற்புரை நிகழ்த்தினார்.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக முத்தமிழ் சங்க தலைவர் ஷா, அன்வர் பிசினஸ்மென் சர்வீஸ் நிறுவன மேலாண்மை இயக்குநர் அன்வர்தீன், இலக்கிய ஆர்வலர்கள் ஆசிப் மீரான், அபுதாகிர், இர்ஷாத், பீட்டர், இலங்கை மௌலவி அஹில் முஹம்மத் உள்ளிட்ட பலர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement