/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
துபாயில் இந்திய பட்டு ஜவுளி தொடர்பான வர்த்தக கண்காட்சி
/
துபாயில் இந்திய பட்டு ஜவுளி தொடர்பான வர்த்தக கண்காட்சி
துபாயில் இந்திய பட்டு ஜவுளி தொடர்பான வர்த்தக கண்காட்சி
துபாயில் இந்திய பட்டு ஜவுளி தொடர்பான வர்த்தக கண்காட்சி
செப் 17, 2025

துபாய் : துபாயில் இந்திய பட்டு ஜவுளி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் மற்றும் இந்திய கன்சுலேட் ஆகியவை இணைந்து வர்த்தக கண்காட்சியை நான்காவது ஆண்டாக நடத்தியது.
இந்த கண்காட்சியை இந்திய கன்சல் ஜெனரல் சதீஷ்குமார் சிவன் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் அந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ள அரங்குகளை பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் தலைவர் டாக்டர் பிமல் மவாண்டியா, செயல் இயக்குநர் சஞ்சீவ் கே. சர்மா, நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பிபின் சாத், நவ்ரத்த்டன் சம்தாரியா, ஒ.பி.கர்க் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
துபாய் உள்ளிட்ட அமீரகம், வளைகுடா, ஆப்பிரிக்க நாடுகளுக்கு இந்திய ஜவுளி பொருட்கள் ஏற்றுமதி செய்வதற்கு இந்த கண்காட்சி மிகவும் முக்கிய பங்கினை வகிக்கிறது.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement