/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
TNTJ - ஜித்தா மண்டலம் நடத்திய 31-வது இரத்ததான முகாம்
/
TNTJ - ஜித்தா மண்டலம் நடத்திய 31-வது இரத்ததான முகாம்
TNTJ - ஜித்தா மண்டலம் நடத்திய 31-வது இரத்ததான முகாம்
TNTJ - ஜித்தா மண்டலம் நடத்திய 31-வது இரத்ததான முகாம்
மே 24, 2025

ஹஜ்ஜி செய்ய வரும் ஹாஜிகளின் நலனைக் கருதி சவுதி அரேபியாவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் (TNTJ) மற்றும் கிங் அப்துல் அஜீஸ் மருத்துவமனை (KAH) இணைந்து நடத்திய 31-வது இரத்ததான முகாம் நடைபெற்றது.
முகாமில் சுமார் 98 க்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்து கொண்டு, அதில் 84 கொடையாளர்கள் தங்கள் குருதியைத் தானமாக வழங்கினர். முகாமில் தன்னார்வ கொடையாளர்கள், ஜெத்தா தமிழ்ச் சங்கம், மற்றும் ஜெத்தா செந்தமிழர் பாசறை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மருத்துவக் குழுவினர் டாக்டர் அய்மன், டாக்டர் அஹ்மத் இலியாஸ் மற்றும் அனைத்து கிளை நிர்வாகிகள் உடன் TNTJ - ஜித்தா மண்டலம் இம்முகாமை சிறப்பாக நடத்தினர்.
- நமது செய்தியாளர் M Siraj
Advertisement