/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
துபாய் ஓட்டப்போட்டியில் சாதனை படைத்து வரும் தமிழக வீரர்
/
துபாய் ஓட்டப்போட்டியில் சாதனை படைத்து வரும் தமிழக வீரர்
துபாய் ஓட்டப்போட்டியில் சாதனை படைத்து வரும் தமிழக வீரர்
துபாய் ஓட்டப்போட்டியில் சாதனை படைத்து வரும் தமிழக வீரர்
பிப் 23, 2025

துபாய்: துபாய் நகரில் நடந்த ஓட்டப்போட்டியில் நாகர்கோவிலைச் சேர்ந்த செய்யது அலி முதலிடம் பெற்றார். துபாய் விளையாட்டு கவுன்சில் ஆதரவுடன் 'துபாய் கேனல் ரன்' என்ற ஓட்டப்போட்டி நடந்தது. இந்த போட்டியானது 1 கிலோ மீட்டர், 3 கிலோ மீட்டர், 5 கிலோ மீட்டர் மற்றும் 10 கிலோ மீட்டர் ஆகிய பிரிவுகளில் நடந்தது.
இந்த போட்டியில் 5 கிலோ மீட்டர் தூர ஓட்டத்தில் 50 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் செய்யது அலி முதலிடத்தை பெற்றார். அவருக்கு விளையாட்டு கவுன்சில் அதிகாரி பதக்கம் வழங்கி கவுரவித்தார். தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்று வரும் செய்யது அலிக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement