/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
குவைத்தில் பிரதமர் மோடி வரவேற்று கோலாகலம்
/
குவைத்தில் பிரதமர் மோடி வரவேற்று கோலாகலம்
டிச 21, 2024

என்றுமில்லா கோலாகலத்துடன் குவைத் நாடு!
அங்கு திருவிழாக்கோலம்!.அதற்கு காரணம் நம் பிரதமர் மோடி!
மோடி, குவைத் தவிர அநேகமாய் அனைத்து அரபு நாடுகளுக்கும் இதற்கு முன்பு விஜயம் செய்திருக்கிறார்.
இப்போது டிசம்பர் 21ல் குவைத்திற்கும்!
**43 வருடங்களுக்குப் பிறகு குவைத் செல்லும் இந்திய பிரதமர் இவர்!
**அவரது இரண்டு நாள் பயணத்தை குவைத் உற்சவமாக்கி இருக்கிறது. சிவப்பு கம்பளம்!
**பொது போக்குவரத்து பஸ்களும் “மோடி வெல்கம்” என ஊரை சுற்றிச்சுற்றி வருகின்றன.
**குவைத்தின் 50 லட்சம் ஜனத்தொகையில் இந்தியர்கள் 10+L-க்கள்! அங்கு வெளிநாட்டவர் எண்ணிக்கையில் இந்தியருக்கு முதலிடம். முன்னுரிமை!
** இந்த தருணத்தில் இரு நாடுகளுக்கிடையே பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.
**அரசு முறை பயணம் என்றாலும்கூட, இந்திய தூதரக ஏற்பாட்டில் பிரமாண்ட கூட்டத்தில் மோடி பேசுகிறார். அதற்கு பாஸ் கிடைக்காதா என மக்கள் பெரும் அலைச்சலில்!
**அத்துடன் பாலைவனத்தில் இருக்கும் தொழிலாளர்களின் காம்ப்களுக்கும் மோடி விஜயம் !
**இதற்காக படு சுமாராய் இருக்கும் அந்த பகுதி சாலைகள் வேக வேகமாய் செப்பனிடப் படுவது ஆச்சர்யம். பெருமிதம்!
**மீடியாக்கள் வெகு சுறுசுறுப்பு! பத்திரிகைகள் மோடிக்காக சிறப்பு மலர்கள் வெளியிடுகின்றன.
அப்படி சிறப்பு மலர் வெளியிடும் பிரபல TheTimes இதழ் அங்குள்ள Indian Frontliners சேவை அமைப்பின் நிறுவனரான என்னிடமும் வாழ்த்து செய்தி கேட்டுள்ளது.
என். சி. மோகன்தாஸ்; படங்கள்: வேங்கட மதி
Advertisement