/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
விமானப் பயணம் தடைபட்ட பெண்ணுக்கு NRTIA -அணி உதவி
/
விமானப் பயணம் தடைபட்ட பெண்ணுக்கு NRTIA -அணி உதவி
ஜூலை 13, 2025

நீரிழிவு நோயால் விமானப் பயணம் தடைபட்ட பெண் சவூதி அரேபியா மேற்கு மண்டல NRTIA - மேற்கு அயலக அணியின் உதவியால் தாயகம் திரும்பினார்.
ஜூன் மாதம் இறுதியில் உம்ரா கடமைகளைச் செய்ய 150 பேர் கொண்ட குழு வந்திருந்தனர். அந்த குழுவினர் சென்னை செல்ல ஜூலை 3ஆம் தேதி அதிகாலை புறப்படும் நேரத்தில் அந்தக் குழுவில் வந்திருந்த 65 வயது பெண் ஆபிதா பேகம் நீரிழிவு நோயின் தாக்கத்தால் வலது கால் வீங்கி பயணம் செய்ய முடியாமல் போக அவருடைய மருமகன் ராஜா முஹம்மது சவூதி அரேபியா மேற்கு மண்டல NRTIA வின் துணை அமைப்பாளர் தஞ்சை ஜாஹிர் ஹுசைனுக்கு ரியாத் தமிழ்ச் சங்க முன்னாள் தலைவர் பரங்கிப் பேட்டை பக்ருதீன் இப்னு ஹம்தன் மூலம் அவசர உதவி கோரப்பட்டு மக்காஹ் அல் நூர் மருத்துவமனை சென்று அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து, 7 நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சைக்கு பிறகு திருச்சிக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
மக்காஹ்வில் ஹஸன் எ பருத்தி வீரன், அல் ஹூதா உம்ராஹ் சர்வீஸ் மசூத் ஹாஜியார் மற்றும் நிர்வாகத்தினர், மருத்துவ நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு உறுதுணையாக இருந்தனர். தாயகத்தில் இருந்து தேவையான ஆலோசனை வழங்கிய NRTIA மேற்கு மண்டல அமைப்பாளர் எழில்மாறனுக்கும், உடன் இருந்து உதவிய துணை அமைப்பாளர் தஞ்சை ஜாஹிர், NRTIA அமைப்பின் முகமது உமர் ஆகியோருக்கு குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.
- நமது செய்தியாளர் M Siraj
Advertisement