/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
துபாயில் கிரீன் குளோப் சார்பில் தொழிலாளர்களுக்கு உணவுப் பொருள்
/
துபாயில் கிரீன் குளோப் சார்பில் தொழிலாளர்களுக்கு உணவுப் பொருள்
துபாயில் கிரீன் குளோப் சார்பில் தொழிலாளர்களுக்கு உணவுப் பொருள்
துபாயில் கிரீன் குளோப் சார்பில் தொழிலாளர்களுக்கு உணவுப் பொருள்
ஜூலை 14, 2025

துபாய்: துபாயில் கிரீன் குளோப் அமைப்பு சார்பில் தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி ஜெபல் அலி பகுதியில் உள்ள தொழிலாளர் முகாமில் இதயங்களைக் குளிர்வித்தல் என்ற கருப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அமீரகத்தின் கடுமையான கோடையில் சுட்டெரிக்கும் சூரியனின் தகிப்பினை அமீரக அரசால் இங்கு வசிக்கும் மக்களுக் காக பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
அதன் அடிப்படையில் இப் வெப்பத்தை பொருட்படுத்தாமல் இந்த நாட்டின் வளர்ச்சியில் முக்கியபங்கு வகிக்கும் அமீரக தொழிலாளர்கள் இரவு பகல் பாராமல் உழைத்திடும் (construction workers) தொழிலாளர்க்கு இதயங்களைக் குளிர்விக்கும் விதமாக அமீரக அரசின் ஆதரவோடு கிரீன் குளோப் சார்பாக முதற்கட்டமாக பழச்சாறு, லபான், ஆப்பிள், கேக், பிஸ்கட், தண்ணீர் மற்றும் சிப்ஸ் போன்ற உணவுப் பொருட்கள் 500 தொழிலார்களுக்கு வழங்கப்பட்டது.
இதில் பல்வேறு நபர்கள் கலந்துகொண்டு குடும்பமாக தங்களது குழந்தைகளோடும் பல்வேறு தொழில் நிறுவனங்களின் பொறுப்பாளர்களும், கீழை கம்யூனிட்டி செண்டரின் நிர்வாகி கீழக்கரை முஹம்மது ராசிக் உள்ளிட்ட அமீரக தமிழ் சமூக ஆர்வலர்களும் பள்ளி குழந்தைகளும் நிகழ்வில் பங்கேற்று தொழிலாளர்களின் நலனில் தங்களது பங்களிப்பை வழங்கினர்.
கிரீன் குளோப் தன்னார்வலர்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டினை சிறப்பாக செய்து இருந்தார்கள். கிரீன் குளோப் நிறுவனர் ஜாஸ்மின் அபுபக்கர் அனைவருக்கும் நன்றியினை தெரிவித்தார்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement