sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 13, 2025 ,ஆவணி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வளைகுடா

/

செய்திகள்

/

குவைத்தில் தமிழ்நாடு பொறியாளர்கள் குழுமம் (TEF-Kuwait) நடத்திய சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டங்கள்.

/

குவைத்தில் தமிழ்நாடு பொறியாளர்கள் குழுமம் (TEF-Kuwait) நடத்திய சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டங்கள்.

குவைத்தில் தமிழ்நாடு பொறியாளர்கள் குழுமம் (TEF-Kuwait) நடத்திய சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டங்கள்.

குவைத்தில் தமிழ்நாடு பொறியாளர்கள் குழுமம் (TEF-Kuwait) நடத்திய சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டங்கள்.


மார் 17, 2025

Google News

மார் 17, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குவைத்தில் உள்ள தமிழ்நாடு பொறியாளர்கள் குழுமம் (TEF) சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடியது. நிகழ்வுமாலை 'தமிழ்தாய் வாழ்த்து' பாடலுடன் தொடங்கியது. தீபாகபில் பாதுகாப்பு குறிப்புகள் (Safety moments) வழங்க, மாலதி கலையரசன் திருக்குறள் வாசித்தார். மகாலட்சுமி ராஜா வரவேற்பு உரை நிகழ்த்தினார்.

ஷிஃபா அல்ஜசீரா மருத்துவ மையத்தைச் சேர்ந்த டாக்டர் அனிந்திதாமேதி, தோல் மற்றும் கூந்தல் ஆரோக்கியம் குறித்த தவகல்களைப் பகிர்ந்து கொண்டார். மேலும் பளபளப்பான தோற்றத்தைப் பராமரிப்பதற்கான நடைமுறை ஆலோசனைகளையும் வழங்கினார்.


அதனைத் தொடர்ந்து, குவைத் தேசிய வங்கியின் (NBK) Data Scientist, கலியா அல் அன்சாரி 'அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல்& கணிதத் துறைகளில் (STEM) பெண்களின் பங்களிப்பு' என்கிற தலைப்பில், தொழில் நுட்பத் துறையில் ஒரு பெண்ணாக தனது அனுபவங்களையும் சவால்களையும் பகிர்ந்து கொண்டார்.


சிறப்பு விருந்தினரான தமிழக கல்வியாளர் மற்றும் Chisel & Evolve இன் நிறுவனர் டாக்டர் ஷ்யாமளா ரமேஷ்பாபு, ' பெண் எனும் ஆணிவேர்” என்கிற தலைப்பில் உரையாற்றினார். டாக்டர் ஷ்யாமளா குடும்ப மற்றும் சமூகக் கட்டமைப்புகளில் பெண்களின் பங்களிப்பு குறித்த கண்ணோட்டத்தையும் ஆலோசனைகளையும் வழங்கினார்.


முன்னதாக நித்யா வடிவேலன், அமுதா சுப்பிரமணியன் மற்றும் வினோதினி கிஷோர் ஆகியோர் விருந்தினர்களைப் பற்றிய அறிமுகக் குறிப்புகளை வழங்கினர்.


டாக்டர் விஜயலட்சுமி ஆனந்தராஜ், டாக்டர் ரூமியா ஜஸ்டின் ஆகியோரால் நடத்தப்பட்ட கேள்வி பதில் அமர்வு, பங்கேற்பாளர்கள் பேச்சாளர்களுடன் நேரடியாகப் பேசவும், ஆலோசனை பெறவும், தங்கள் சந்தேகங்களைத் தெளிவுபடுத்தவும் ஒரு வாய்ப்பை வழங்கியது.


தமிழ்நாடு பொறியாளர்கள் குழும உறுப்பினர்கள் விருந்தினர்களுக்கு சால்வைகள், மாலைகள் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவித்தனர்.


நிகழ்வை ஈஸ்வரி பாலசுப்பிரமணியன், ஜூடி அருண் கோல்டன் தொகுத்து வழங்கினர். பிரதமா மணியரசு நன்றி கூறினார்.


TEF 2025 குழு இந்த நிகழ்வை மிகவும் கவனமாக ஏற்பாடு செய்து, TEF இன் சர்வதேச மகளிர்தின கொண்டாட்டத்தை உண்மையிலேயே மறக்க முடியாத நிகழ்வாக மாற்றியது.


- தினமலர் வாசகர் சுப்புவேல்



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us